Sunday, December 28, 2014

மனைவிகள் மட்டும் படிக்க வேண்டாம்....!

இல்லத்தரசி அருமை இல்லாதப்ப தெரியும் என்பது முன்னோர் சொல்ல மறந்த பழமொழி. பல் தேய்க்கப் போகிற போதுதான் டூத் பேஸ்ட் காலி என்று தெரிகிறது. பென்சில் வைத்து உருட்டி, இடுக்கி வைத்துப் பிதுக்கி கடும் முயற்சி. பட்டாணி அளவு பேஸ்ட்டை எக்ச்டிராக்ட் செய்யப் போகிற போது டினுங் என்று அழைப்பு மணி அடிக்கிறது. கை நடுங்கி அந்த ஒரு துளி பேஸ்ட்டும் பாதத்தில் சொட்டுகிறது. யாருடா காலையிலேயே டார்ச்சர்? என்று கதவைத் திறந்தால் மேல் வீட்டுப் பெண், அங்க்கிள் அம்மா பேஸ்ட் வாங்க மறந்துட்டாங்களாம்.

கொஞ்சம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க என்று நிற்கிறாள். சேலை இல்லைன்னு சின்னாயி வீட்டுக்குப் போனா ஈச்சம் பாயைக் கட்டிக்கிட்டு எதிர்ல வந்தாளாம்ன்கிறது இதான் போலிருக்கு. பில்டரில் காபிப் பொடியைப் போட்டு வெந்நீரை ஊற்றி விட்டு வெளியே வந்தால், ராத்திரி வாஷிங் மிஷினில் போட்ட துணியெல்லாம் எடுத்துக் காயப் போடாதது ஞாபகம் வருகிறது. மிஷினைத் திறந்தால் ஒரு வினோதமான துர்நெடி. மறுபடி ரின்ஸ் போட்டால்தான் இது சரியாகும்.

ஆன் செய்யப் போகிற போது ஞாபகம் வருகிறது, கரண்ட் போக இன்னும் பத்து நிமிஷம்தான்! ஐயய்யோ பத்து நிமிஷம்தானா! இந்த ஓசூர் குளிரில் எவன் தண்ணீரில் குளிப்பது ஓடிப் போய் இன்ஸ்டன்ட் வாடர் ஹீட்டரை ஆன் பண்ண வேண்டியிருக்கிறது. டிகாஷன் இறங்கி விட்டதா என்று பார்த்தால் அப்படியே கல்லுளி மங்கன் மாதிரி இருக்கிறது. கரண்டி எடுத்து மண்டையில் ரெண்டு போட்டால் கக்கலும் கரைசலுமாக இறங்குகிறது.

பால் பாக்கெட்டைக் கிழித்து ஊற்றி ஸ்டவ்வை பற்ற வைத்தால் போன் அடிக்கிறது. எடுத்தால் காலையிலேயே ராங் கால். நேத்தி லோட் ஏத்தியாச்சு. நாளக்கி டெலிவரி ஆய்டும் நேத்தி ஏத்தினா நாளைக்கே எப்டிய்யா டெலிவரி ஆகும்? ஏன் ஆகாம, பூனாவிலேருந்தே இப்பல்லாம் நாலு நாள்தான். டிரன்க் ரோடு ரெடியாயிடிச்சு. லாஸ்ட் லோடுக்கே இன்னும் பேமென்ட் வரலை ஏன் வராம, தம்பி பேருக்கு செக் அனுப்பியாச்சே? யாரு ராஜலிங்கம் பேருக்கா? ம்ம்ம் அவனுக்கு அக்கவுண்டே கிடையாதே? அதனால என்ன, செல்ப் செக்தான் அனுப்பியிருக்கேன் எவ்ளோ அமவ்ண்டு? இருபத்திநாலு கோடி என்னது, மொளகா லோடுக்கு இருபத்திநாலு கோடியா? மொளகாயா? கஞ்சா இல்லையா? கஞ்சாவா? யாருங்க பேசறது? இதத்தான்யா மொதல்ல கேட்டிருக்கணும் அதற்குள் புஸ்ஸ்ஸ்ஸ் என்று பால் பொங்குகிற சத்தம்.

ஓஓஓடிப் போகிற போது முட்டியில் பிரிஜ் இடித்து உட்கார வேண்டியிருக்கிறது. அதற்குள் பால் பர்னரில் வழிந்து காஸ் நாற்றம். ஒரு கன்றாவிக் காப்பியைக் குடித்து விட்டு பாத்ரூமுக்கு ஓடினால் வெந்நீர் வழிந்து சாக்கடையில் போய்க் கொண்டிருக்கிறது. குளிக்க ஆரம்பித்தால் மறுபடி வாசலில் பெல். ஐயய்யோ, உடனே போகாவிட்டால் பால்காரன் நான் ஆபிஸ் போய் விட்டேன் என்று நினைத்துக் கொண்டு பால் போடாமல் போய் விடுவானே? மறுபடி ஓட்டம். திரும்பியும் அதே குண்டுப் பெண்.

அங்க்கிள் எங்கம்மாவோட உள்பாவாடை விழுந்திடுச்சு அய்யே இதை ஏன் ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கே? சத்தம் போடாம திருப்பி எடுத்துக் கட்டிக்க வேண்டியதுதானே? அய்யே சமத்து வழியுது. உங்க வீட்டு பால்கனியில விழுந்திடுச்சு சரி சரி எடுத்துகிட்டு ஓடு அங்க்கிள் உங்க டிரஸ் எல்லாம் கீழ் வீட்டு பால்கனியில விழுந்திடுச்சா?

கிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா!

‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பட்டி தொட்டியெல்லாம் ஃபேமஸ் ஆனார் வித்யாபாலன். இப்போது அதே ஸ்டைலில், கிட்டத்தட்ட அதே பெயரில், அதாவது ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ என்னும் படம் கிளுகிளுப்பாகத் தயாராகி வருகிறது. ‘டர்ட்டி பிக்சருக்கு’ வித்யாபாலன் என்றால், ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ படத்துக்கு மல்லிகா ஷெராவத். இது கொஞ்சம் ஏடாகூடாமான படம் என்பதால், முதலில் வித்யாவையே அணுகினாராம் இதன் இயக்குநர் பொக்காடியா. 'அதே ஸ்டைல் படமா?  நோ.... என் ஹஸ்பெண்ட்கிட்ட கேட்டுத்தான் சொல்லணும்!’ என்று வித்யா கைவிரித்துவிட, சட்டென பொக்காடியா மனதில் வந்து போனவர் மல்லிகா ஷெராவத். முழு கிளுகிளுக் கதையைக் கேட்டதும், ‘‘ஷூட்டிங் எப்போ?’’ என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் கிளம்ப ஆரம்பித்து விட்டாராம் மல்லிகா ஷெராவத்.

தேசியக்கொடி நிறத்தில் உள்ள துணியை மல்லிகா ஷெராவத் அணிந்து நடித்ததற்காக, ‘‘தேசியக்கொடியை அவமதித்துவிட்டார்’’ என்று நடுவில் இந்தப் படத்திற்குத் தடை விதித்து, இப்போது மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது ‘டர்ட்டி பாலிடிக்ஸ்!’

‘‘இது எல்லா படங்களைப்போல் சாதாரணமான கவர்ச்சிப் படம் இல்லை. இந்தக் கிளு கிளுப்பு மூலம் கருத்தும் சொல்லியிருக்கிறோம்!’’ என்று 'டர்ட்டி பாலிடிக்ஸ்' பற்றி இயக்குநர் பொக்காடியா, பாலிவுட் தளத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில்,  சில வயதான வெள்ளை வெளேர் அரசியல்வாதிகளின் கறுப்பு ஏரியாவை அம்பலப்படுத்தும் அனோக்கிதேவி என்ற ஒரு ஏழைப் பெண் கேரக்டரில், படுக்கையறைக் காட்சியில் வெளுத்து வாங்கியிருக்கிறாராம் மல்லிகா.

வயதான அரசியல்வாதிகளாக ஓம்பூரி, ஜாக்கி ஷெராப், அனுபம்கெர் என்று மூத்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதில் ஓம்பூரியுடனான நெருக்கமான காட்சிகளில் செம டர்ட்டியாக நடித்து, ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ யூனிட்டிடம் பாராட்டுகளை வாங்கிக் குவித்துவிட்டாராம் மல்லிகா. ‘‘ஆரம்பத்தில் ஓம்பூரி சாருடன் படுக்கையறைக் காட்சியில் நடிப்பதற்கு ரொம்பவே தயக்கமாக இருந்தது. ஓம்பூரி சார்தான் என் தயக்கத்தைப் போக்கினார். இப்போது அவருடன் நடிப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை!’’ என்று தில்லாகச் சொல்கிறார் மல்லிகா.

‘‘மல்லிகா ரொம்ப போல்டான பொண்ணு!’’ என்று பதிலுக்குப் பூரிக்கிறார் ஓம்பூரி. படம் எப்போ ரிலீஸ்னு கேக்கிறீங்களா? பிப்ரவரி 15 அல்லது 26 ரெண்டு தேதிகளும் பரீசிலனையில் உள்ளது. அப்போ தேசிய விருது வாங்கியே தீருவேன்னு சொல்லுங்க மல்லிகா ஜி.

தமிழ்
vikatan

திருட்டுப் பயம் இல்லாத ஒரு ஹை-டெக் கிராமம்...!

இதுபற்றி கேட்டபோது, ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார், ஊராட்சி மன்றத்தலைவர் கமலா பாலகிருஷ்ணன், “திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களிலிருந்து ஊர் மக்களை காப்பாற்ற, எல்லாத் தெருக்களிலும் மொத்தம் 7 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்கிறோம். அதேமாதிரி இரவு நேரங்களிலும் கண்காணிக்கக் கூடிய வகையில் ‘நைட் விக்ஷன்’ கேமரா வசதியும் உள்ளது. எல்லா தெருக்களிலும் ஒலிப் பெருக்கி அமைத்திருக்கிறோம். தண்ணீர் வரும் தேதி, நேரம் மற்றும் முக்கிய தகவல்களை ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிப்போம். எந்தத் தகவலை யார் வேண்டும்னாலும் தெரிவிக்கலாம். அலுவலகத்திலுள்ள நோட்டில் பெயர், என்ன காரணத்திற்காக மைக்கில் பேசப்போகிறோம் என்பதை குறிப்பிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பேசலாம்.

இதைத்தவிர, காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பக்திப்பாடல்களை தினமும் ஒலிபரப்பு செய்கிறோம். எல்லா தெருக்களிலும் மொத்தம் 36 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பையை சுத்தம் செய்கிறோம். எந்த வீட்டு வாசலில் குப்பைத் தொட்டி இருக்குதோ அதற்கு பக்கத்திலுள்ள இரண்டு வீட்டுக்கரர்களிடம், ‘இன்று குப்பைத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது’ என்று எழுதி கையெழுத்து வாங்குகிறோம். பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடைசெய்துள்ளோம். இதனால் பிளாஸ்டிக் இல்லா கிராமமாகவும் எங்கள் கிராமம் செயல்படுகிறது.

ஜமீன்தேவர்குளம் டூ துரைச்சாமிபுரம், ஜமீன்தேவர்குளம் டூ முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் பேருந்து செல்வதற்கு வசதியாக தார்ச்சாலையும், கிராமம் முழுவதும் சிமெண்ட் சாலையும் அமைத்துள்ளோம். பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஊர் முழுவதும் சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. நவீனக் கழிப்பறைகள், குளியலறைகள் என பொதுமக்களுக்கு தனியாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ சண்டைகள் வந்ததில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளையாகவே பழகி வருகிறோம். கிராமத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம்.

இந்த ஊரிலிருந்து படித்து வெளி மாநிலம், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர்களின் உதவியால்தான் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தியிருக்கோம். இதுவரைக்கும் சி.சி.டி.வி கேமரா மூலம் 6 திருட்டு சம்பவங்களைக் கண்டுபிடிச்சிருக்கோம். சில நாட்களுக்கு முன்பு ஒரு செயின் காணாமப் போச்சு. ஆனால், அன்றைக்கு கேமராவை ஆன் செய்ய மறந்துட்டோம். செயினின் அடையாளங்களைத் தெளிவா மைக்கில் சொல்லி, ‘செயினை எடுத்தவர் யாருன்னு கேமராவுல பாத்துட்டோம். மரியாதையா.. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒப்படைத்து விடவும்’ என்று ஒரு பேச்சுக்குச் அறிவிப்பாக சொன்னோம். உண்மையிலேயே அன்னைக்கு ராத்திரியே செயினை நியூஸ் பேப்பர்ல பொட்டலமா மடிச்சு ஆபிஸுக்குள்ள போட்டுட்டாங்க, மறுநாள் உரியவரிடம் செயினைக் கொடுத்துட்டோம். சிசிடிவி கேமரா மாட்டியிருப்பதால் இது ஒரு வசதியாப் போச்சு. எதுவானாலும் கேமராவுல பதிஞ்சுடும்னு ஒரு பயம் இருக்கு. நைட் விஷன் பதிவு வசதி இருப்பதால் இரவில் மது அருந்துவது, தெருக்களில் உறங்குவது தடுக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் ஊருக்குள் வரத் தாமதமாவதால் மக்கள் அனைவரிடமும் நிதி சேர்த்து ஆம்புலன்ஸ் வாங்கவும் திட்டம் போட்டுருக்கோம். கிராமத்துல ஏதாவது குறைன்னா புகார் பெட்டியில புகாரை எழுதி போட்டுடலாம்.


ஜமீன் தேவர்குளத்திற்கு அருகில் வெங்கட்டா ஓடை என்ற நீரோடை உள்ளது. கயத்தாறு வீரபாண்டியகட்டபொம்மன் சிலைக்கு பின் பகுதியிலுள்ள நீரோடை தண்ணீரானது, வானரமுட்டி வழியாக ஜமீன்தேவர்குளம் வந்தடைகிறது. இந்த ஓடைக்கு நடுவே தடுப்புச்சுவர் கட்டி ஓடையைத் தூர்வாரி சுத்தப்படுத்தினால் சுமார் 20 கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதற்காக ஒன்றியத்தில் தீர்மானம் போட்டு, நிதிக்காக காத்திருக்கிறோம். கிராமத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க இருக்கிறோம். ” என்று முடித்தார்.

பஞ்சாயத்து என்றால் அடிப்படை வசதிகளான பேருந்து, கழிப்பறை, சாலை, தெருவிளக்கு வசதிகள் கட்டாயம் தேவை. ஆனால், ஜமீன் தேவர்குளம் பஞ்சாயத்து அதையும் தாண்டி அசம்பாவிதங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராவும், பளிச்சிடும் தெருவிளக்குகள் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த அமைத்திருக்கும் ஒலிப்பெருக்கி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. கவனிக்கத்தக்கவையும் கூட. பல சமூக அமைப்புகளும் இக்கிராமத்தை பாராட்டியுள்ளது.

எல்லா கிராமமும் ஜமீன் தேவர்குளம் போல மாறிவிட்டால் நல்லதுதானே!

இ.கார்த்திகேயன்
vikatan

130வது ஆண்டு விழா: காங்கிரசில் இணையுமாறு குஷ்பு அழைப்பு!

காங்கிரஸ் கட்சியின் 130வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அக்கட்சியின் அனைவரும் இணையுமாறு நடிகை குஷ்பு அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 130வது ஆண்டு விழா (28ஆம் தேதி) கொண்டாடப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

மேலும், அங்கு கூடியிருந்த குழந்தைகளுக்கு சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.

நடிகை குஷ்பு

இதுகுறித்து சமீபத்தில் காங்கிரஸ் இணைந்த நடிகை குஷ்பு தனது டிவிட்டர் சமூக வலைதளத்தில், ''காங்கிரசின் 130வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நாளில் ஒவ்வொரும் காங்கிரசில் இணைந்து , ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது டிவிட்டரில், ''காங்கிரஸ் கட்சியின் 130வது தொடக்க தினம் இன்று கொண்டாடுவதை முன்னிட்டு காங்கிரசார் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் டி.என்.ஏ. காங்கிரஸ் கட்சி'' எனக் கூறியுள்ளார்.

2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்

நிகழும் மங்களகரமான 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 17ம் தேதி 1-1-2015 வியாழக் கிழமையும் சுக்ல ஏகாதசியும் பரணி நக்ஷத்ரமும் சிம்ம லக்னமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2015 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

2015 புத்தாண்டு  பொதுபலன்

சிம்ம லக்னத்தில் வருட பிறப்பு இருப்பதால் லக்னாதிபதி சூரிய பகவான் ஆவார். ஆண்டுதொடக்கத்தில் லக்னாதிபதி சூரியன் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான தனுசில் சஞ்சாரம்  பெற்றுள்ளார். இதன் பலன் இந்த ஆண்டு அரசியல் சார்ந்த விஷயங்களில் மாற்றத்தைக் காட்டுகிறது.

லக்னாதிபதிக்கு பத்தில் ராகு இருப்பதால் பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும்.  புத்திரகாரகன் குரு லக்னத்திலேயே இருப்பதால் குழந்தை பிறப்பு அதிகமாகும்.

நோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். அதேபோன்று கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது.

எதிரிகள் தொல்லை,  அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். குருவின் பார்வை 7 ஆம் இடத்தில் பதிவதால் கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை சமாதானத்தில் முடியும். விவாகரத்துக்கள் குறையும். தொழில் பங்குதாரர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

அரசியலில் திடீர் மாற்றங்கள்  உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்.

வாகனங்கள் வாங்குவோரது  எண்ணிக்கை உயரும்.  அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது  அவசியம்.  காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும்.

கிரக பெயர்ச்சி (வாக்கியப்படி):

குருபெயர்ச்சி:
05-07-2015 அன்று கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

பன்னிரு ராசிகளுக்கமான விரிவான பலன்கள் தொடர்ந்து இங்கு இணைக்கப்படும்.

மேஷம்:

இடபம்:

கடகம்:

மிதுனம்:


சிம்மம்:

கன்னி: 

ISIS உடன் சேரச் செல்ல முயன்ற 6 பேரைக் கைது செய்தது இந்தோனேசியா

சனிக்கிழமை இந்தோனேசியா போலிசார் தமது நாட்டில் இருந்து ISIS உடன் இணைவதற்காக சிரியா செல்ல முயன்ற 6 பேரை ஜகார்த்தா சோயேகர்னோ ஹட்டா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

போலியான கடவுச் சீட்டுக்களுடன் கைதான இந்த 6 பேரில் 10 வயதுக் குழந்தையுடன் ஓர் திருமண ஜோடியும் அடங்குகின்றனர். மேலும் இப்பயணிகளைத் தொடர்ந்து இவர்களது பயணத்தை ஏற்பாடு செய்திருந்த நபரும் கைது செய்யப் பட்டுள்ளார்.

கைதான பின் பயணிகளிடம் மேற்கொள்ளப் பட்ட விசாரணையின் போதே ஜிஹாதிஸ்ட் போராளிகளுடன் இணைய இவர்கள் முயன்றது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இவர்களது பயணத்தை ஒழுங்கு செய்தவர் மற்றும் பயணத்துக்கான நிதிப் பங்களிப்பை அளித்தவர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. உலகில் மிக அதிக சனத்தொகை கொண்ட முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இருந்து ISIS உடன் இணைவதற்காக ஜூன் மாதம் 86 பேரும் ஆக்டோபரில் 264 பேரும் சிரியா மற்றும் ஈராக்கை நோக்கிச் சென்றுள்ளதாக BNPT எனப்படும் இந்தோனேசியாவின் தேசிய தீவிரவாதத் தடுப்பு ஏஜன்ஸி தெரிவித்துள்ளது.

மேலும் இவ்விடயம் தொடர்பில் BNPT அமைப்பின் தலைவர் சௌட் உஸ்மான் நாசுசன் ஜகார்த்தா போஸ்ட் பத்திரிகைக்கு அளித்துள்ள செய்தியில், இதுவரை ISIS அமைப்பில் சேர்ந்து போராடுவதற்காக 514 இந்தோனேசியர்கள் இங்கிருந்து ஈராக்கும் சிரியாவுக்கும் சென்று சேர்ந்துள்ளனர் எனவும் இதில் அரைவாசிப் பேர் மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஊழியர்கள் ஆவர் எனவும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு தயாராகிட்டாரா உதயநிதி?

உதயநிதி ஸ்டாலின் தன் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் ஒரு விஷயத்தில் கவனமாக இருப்பார். அது? யாரும் தியேட்டர் வாசலில் திமுக கொடியை கட்டிவிடக் கூடாது என்பதுதான்.

பூனையோட விரதம் மில்க் ஸ்மெல் வராத வரைக்கும்தான் போலிருக்கிறது. இவரது புதிய படமான ‘நண்பேன்டா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மவுண்ட் ரோடில் உள்ள ஒரு தியேட்டரில் வைத்திருந்தார்கள். உதயநிதியை வாசலை மறித்து வரவேற்க அப்படியொரு திமுதிமு. திரண்டவர்கள் எல்லாரும் கழக தொண்டர்கள்தான்.

கருப்பு சிவப்பு கொடி பிடித்தபடி ‘கழகமே... தலைவனே...’ என்று கோஷம் போட ஆரம்பித்துவிட்டார்கள். தாரை தப்பட்டை என்று அந்த ஏரியாவே அமர்க்களப்பட, சைலன்ட்டாக உள்ளே வந்து சாதுவாக ட்ரெய்லர் பார்க்கலாம் என்று நினைத்த ரெகுலர் மீடியேட்டர்கள், தியேட்டர்காரர்கள் எல்லாருக்கும் கம்பளிப்பூச்சி கடி! உள்ளேயே நுழைய முடியாதளவுக்கு தள்ளிவிடப்பட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி விட்டார் ஜுட்!

தளபதியோட தளபதி அரசியலுக்கு தயாராகிட்டாரு போல...!

கயல் படத்தில் ஈழத் தமிழன்....

தமிழ்த் திரைப்படங்களுக்கு இன்று உலக அளவில் மிகப் பெரும் வியாபாரம் நடைபெற்று வருவதற்கு முழுமுதற் காரணமாக இருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான். சுமார் 30 வருடங்களுக்கு முன் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறிய அவர்களால்தான் இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரவிக் கிடக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் ஈழத் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். தமிழர்களாக இருந்தாலும் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து செயல்படும் தமிழ்த் திரையுலகத்தில் நடிகர்களாகவே, தொழில்நுட்பக் கலைஞர்களாகவோ பெரிதும் புகழ் பெற்றதில்லை.

அவர்களுக்கு அப்படி ஒரு நல்ல வாய்ப்பையும் எந்த இயக்குனரும் கொடுத்ததில்லை. ஆனால், அண்மையில் வெளிவந்துள்ள 'கயல்' படத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஈழத் தமிழரான நகுலன் என்பவரை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் பிரபு சாலமன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

படம் முழுவதும் வரும் அவருடைய கதாபாத்திரம் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் புலம் பெயர் தமிழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் வசிக்கும் பல சின்னஞ் சிறிய நகரங்களில் கூட ஈழத் தமிழர்கள் கூட்டாகச் சேர்ந்து 'கயல்' படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார்களாம்.

இதற்கு முன் 'ஆடுகளம்' படத்தில் ஈழத் தமிழ்க் கவிஞரான வ.சு.ஜெயபாலன் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தொடர்ந்து சில படங்களில் நடித்தார். 'கயல்' படத்தில் வின்சென்ட் என்ற பெயருடன் அறிமுகமாகும் நகுலன் 8 வயதாக இருக்கும் போது ரஜினிகாந்த் பட போஸ்டர் ஒன்றைப் பார்த்து தானும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டதாக படத்தின் இசை வெளியீட்டின் போதே தெரிவித்திருந்தார்.

வின்சென்ட்டுக்கு 'கயல்' படம் திரையுலகில் ஒரு வெற்றிகரமான வாசலைத் திறக்க வாழ்த்துவோம்.

அண்ணன் படத்தில் நடிகைக்கு சான்ஸ் வாங்கி கொடுத்த தம்பி!

தம்பி நடிகருடன் அரசியல் படத்தில் நடித்த நடிகைக்கு அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பே இல்லாமல் போனது.

நான் கதைக்கு தேவப்பட்டால் கிளாமராக கூட நடிக்க ரெடி என அறிவிப்பு கொடுத்தும் கூட நடிகைக்கு வாய்ப்பு வந்த பாடில்லை.

பாவப்பட்ட தம்பி, அண்ணன் நடிக்கும் பெருந்திரள் படத்தில் இரண்டாம் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்திருக்கிறார்.

செரிமான பிரச்சனையா? இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க

தினசரி வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தப்படும் தயிரானது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

தயிரில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இதனை தினமும் பயன்படுத்துவது நல்லதாகும். லாக்டோஸ் சகிப்புத் தன்மையின்மையால் அவதிப்படுபவர்களும் எந்த ஒரு கவலையும் இன்றி தயிரை உட்கொள்ளலாம்.

கால்சியம் நிறைந்த தயிர் பற்கள், எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்கிறது. செரிமான பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வாக இருக்கிறது.

செரிமானத்திற்கு உதவும்

தயிர் வேகமாக செரிமானமாகிவிடும். உணவை வேகமாக உறிஞ்ச உங்கள் உடலுக்கு உதவும். காரசாரமான உணவை சாப்பிட்டால், அதனுடன் சேர்த்து தயிரையும் உண்ணுவது நல்லது.

வாய் பிரச்சனைகள் தீரும்

பாக்டீரியாவால் ஏற்படும் சில வாய் பிரச்சனைகளை தடுக்க தயிர் உதவிடும். தயிரினால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

பசியை அதிகரிக்க

உப்பு அல்லது சர்க்கரையுடன் தயிரை சாப்பிட்டால், பசியை அதிகரிக்க அது மிகவும் நல்லதாகும். தயிரினால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

உடல் எடை குறைப்பு

ஹார்மோன் சமநிலையின்மையின் விளைவால் உடல் பருமன் ஏற்படும். கார்டிசோ அளவுகளை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க தயிர் உதவிடும். ஆனால் மற்றவர்களோ தினசரி கலோரி உட்கொள்ளும் அளவை பொறுத்து தான் தயிரை உட்கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தை போக்கும்

மன அழுத்தம் உடல் நலத்தை பாதிக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க தயிர் உதவும். தயிரினால் கிடைக்கும் பயன்களில் இதுவும் ஒன்று. தயிர் உங்களை சாந்தப்படுத்தும். உங்களுக்குள் குளிர்ச்சியான உணர்வை உண்டாக்கும்.

மூல நோய்க்கு பலன் அளிக்கும்

மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிரை பயன்படுத்தலாம் என ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கிறது. தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும்.

இதயத்திற்கு நல்லது

ஆரோக்கியமான இதயத்தை பேணிட தயிர் உதவிடும். கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவிடும். தயிரை சீரான முறையில் உட்கொண்டு வந்தால், ஆரோக்கியமான இதயத்தை பராமரித்திடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈஸ்ட் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் இதனை உட்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.

கால்சியத்தை அதிகம் கொண்டது

தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால் அது உங்கள் பற்களுக்கும், எலும்புகளுக்கும் நல்லதாகும். எலும்புத்துளை நோய் போன்ற சில பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், சீரான முறையில் தயிரை உட்கொள்வது நல்லது.

பொடுகை நீக்கும்

பொடுகை நீக்க தயிர் சிறந்த தீர்வாக விளங்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உங்கள் தலைச்சருமத்தின் மீது கொஞ்சம் தயிரை தடவினால் போதும், பொடுகு தொல்லை நீங்கும். பூஞ்சை எதிர்ப்பியாக தயிர் செயல்படுவதால், பொடுகை நீக்க இது உதவிடும்.

உங்கள் குழந்தைகளுக்கு அதிக தண்டனை வழங்குகின்றீர்களா?

குழந்தைகளை அதிகமாக தண்டிப்பதே அவர்கள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கு பிரதான காரணமாக அமைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவிலுள்ள King Abdulaziz பல்கலைக்கழத்தின் மருத்துவ பிரிவில் விரிவுரையாளராக திகழும் Dr. Faten Nabeel Al-Zaben என்பவர் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 7 வயதிற்கும் 13 வயதிற்கும் இடைப்பட்ட 65 குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை பெண் குழந்தைகளை விட ஆண்குழந்தைகளே தண்டனைகளால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இரத்த குழாயில் அடைப்பா? பூண்டு சாப்பிடுங்கள்

வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அலைல் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

குறிப்பாக இரைப்பை புற்றுநோயை பூண்டு தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

தினமும் பூண்டை உட்கொண்டு வருவதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மொத்தத்தில், உடலில் நச்சுகள் சேராமல் தடுப்பதில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. மாரடைப்பு மற்றும் இதர இதய நோய் பிரச்சினைகளில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது.

இதில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

அதுமட்டுமின்றி, கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு. தொண்டை பிரச்சினைகளுக்கு விடைகொடுக்கும் பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பொருட்கள், தொண்டை பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கிறது.

தொண்டை எரிச்சல்களைக் குணப்படுத்துவதுடன், சுவாசப் பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் குறைக்கிறது.

மேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண குணங்கள் பல்வலிக்கு நிவாரணம் அளிக்கின்றன.

காளான் ரோஸ்ட்

காளான் அசைவ உணவுகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும் ஒரு உணவுப் பொருள்.

காளானைக் கொண்டு அருமையான ரோஸ்ட் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்யப்பட்ட காளான் - 3/4 கப் (நறுக்கியது)
சோம்பு - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு ஊற வைப்பதற்கு...
கெட்டியான தயிர் - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள காளானை போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு பொடி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

வாணலியில் என்ன நீர்ம நிலையில் இருக்கும் மசாலாவானது சுண்டியதும், அதில் தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பிரட்டி இறக்கினால், காளான் ரோஸ்ட் ரெடி!!!

பாலிமர் டி.வியின் புதிய தொடர் இருமலர்கள்

பாலிமர் தொலைக்காட்சியில் வருகிற 29ந் தேதி முதல் இரு மலர்கள் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7.30 மணிக்கு ஒளிப்பாகும்.

கணவனை இழந்த ஒரு பெண் திருமணம் மண்டபம் நடத்துகிறார். அவருக்கு திருமண வயதில் இரண்டு பெண்கள். திருமண மண்டபத்தில் பல திருமணங்களை பார்க்கும் தாய்க்கு தன் மகள்களை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால் மகள்கள் வேறு துறைகளில் சாதிக்க போராடிக்கொண்டு திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள். தாயின் திருமண ஏக்கம், மகள்களின் லட்சியம் எது நிறைவேறியது என்பதை சொல்லும் கதை.

டிவி சீரியல்களில் கசக்கிப் பிழிகிறார்கள்! -டிவி நடிகை துர்கா பேட்டி

டிவி சீரியல்களில் ஒரு நாளைக்கு 10, 12 சீன்கள்கூட எடுக்கிறார்கள். சில சமயங்களில் சாப்பிடக்கூட நேரம் இருக்காது. அந்த வகையில் நாஙகளெல்லாம் ஒவ்வொரு நாளும் கசக்கிப்பிழியப்படுகிறோம் என்கிறார் டிவி நடிகை துர்கா.

தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

பெரும்பாலும் அழுகாச்சி கேரக்டர்களாக நடிப்பது ஏன்?

அழுகாச்சி கேரக்டர்களாக நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவதில்லை. எனது தோற்றம், முக அமைப்பு எல்லாமே ரொம்ப மென்மையானதாக இருப்பதால் எனக்கு அந்த மாதிரியான கேரக்டர்களே தருகிறார்கள். மேலும், சீரியல்களைப் பொறுத்தவரை ரப் அண்ட் டப்பாக நடிக்கும் வேடங்களில் நடிப்பவர்களை திட்டுவார்கள். ஆனால் என்னைப்போன்று சாப்ட்டான வேடங்களில் நடிக்கும் நடிகைகளை தங்களில் ஒருத்தியாக கருதுவார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் சீரியல் பார்க்கும் பெண்கள் எல்லாருமே என் பக்கம்தான் இருக்கிறார்கள்.

இருப்பினும் உங்களுக்கு தொடர்ந்து ஒரேமாதிரியான நடிப்பது போரடிக்கவில்லையா?

சாப்ட்டான வேடம் என்றாலும் ஒவ்வொரு சீரியல்களிலும் ஒவ்வொரு மாதிரியான வேடங்களில்தான் நடிக்கிறேன். அதோடு, நான் நடிக்கும் கேரக்டர்கள் எல்லாமே கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இப்படி மாறுபட்ட பிரச்சினைகளை உள்ளடக்கிய வேடங்களில் நடிப்பதால் எனக்கு ஒவ்வொரு சீரியல்களிலுமே ஒவ்வொரு மாதிரியான அனுபவம் கிடைக்கிறது. நேயர்களும் எனது நடிப்பை வெகுவாக ரசிக்கிறார்கள். ஆனபோதும், இப்போது நான் நடித்து வரும் சொந்தபந்தம் தொடரில் நான் நடித்து வரும் செளந்தர்யா என்ற கேரக்டர் இதுவரை மென்மையானதாக இருந்தபோதும், இனிமேல் வில்லியாக மாறுகிறது.

அப்படி வில்லியாக மாறும்போது எனக்கு தீங்கு விளைவித்தவர்களை நான் பழிவாங்குவதை நேயர்கள் வரவேற்று கைதட்டுவார்கள். காரணம் அந்த அளவுக்கு நான் இதுவரை கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன். அதனால் இனி வரும் எபிசோடுகளில் எனது கையே ஓங்கியிருக்கும்.

உங்களது மென்மையான முகம் வில்லி அவதாரத்துக்கு பொருந்துமா?

பூ ஒன்று புயலானது எப்படி என்பது உங்களுக்குத் தெரியாதா? சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும்தான் நம்மை மாற்றும். அந்த வகையில், கேரக்டர் நெகடீவாக மாறும்போது அதற்கேற்ற பர்பார்மென்ஸை கொடுத்தால் நமமுடைய கெட்டப்பும் டோட்டலாக மாறி விடும். அந்த மாதிரி ஏற்கனவே சில சீரியல்களில் நான் நடித்திருக்கிறேன். அதனால், என்னால் கதைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் மாறி நடிக்க முடியும்.

சீரியல் நடிகைகளில் எந்த நடிகையின் நடிப்பு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?

என்னை அதிகமாக கவர்ந்த நடிகை என்றால் அது ரம்யா கிருஷ்ணன்தான். சீரியல்களை விட சினிமாவில் அவரது நடிப்பை ரொம்ப ரசிப்பேன். குறிப்பாக, ரஜினியுடன் அவர் நடித்திருந்த படையப்பா படத்தில் பின்னி எடுத்திருப்பார். அதற்கு முன்பு அவர் நடித்திருந்த படங்களை பார்த்தால், ரம்யாகிருஷ்ணனா இது என்று ஆச்சர்யப்படுகிற அளவுக்கு நடித்திருந்தார்.

மற்றபடி சீரியல்களில் ராதிகா மேடம் ரொம்ப பிடிக்கும். எத்தனை வெயிட்டான கதாபாத்திரங்களையும் சுமக்கக்கூடிய நல்ல ஆர்ட்டிஸ்ட். அவரது நடிப்பு ரொம்ப இயல்பாக இருக்கும். இந்தமாதிரி சீனியர்களிடமிருந்தும் நான் நடிப்பு கற்றுக்கொள்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

சீரியல்கள் பார்க்க நேரம் ஒதுக்குவதுண்டா?

ஒரே நேரத்தில் முந்தானை முடிச்சு, சொந்த பந்தம் என இரண்டு மெகா தொடர்களில் நடிப்பதால் நடிப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. அதனால் நான் நடித்த சீரியல்களையே என்னால் பார்க்க முடிவதில்லை. இருப்பினும், எனது வீட்டில் இருப்பவர்கள் பார்த்து தங்களது கருத்தை சொல்வார்கள். அதேபோல் என் அம்மா நிறைய சீரியல்களைப்பார்ப்பதால், ஒவ்வொரு தொடர்களைப்பற்றியும் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்.

மேலும், சில சமயங்களில் நேரம் கிடைத்தால் தமிழ் மட்டுமின்றி இந்தி சீரியல்களையும் பார்ப்பேன். அப்படி நான் பார்த்ததில் தமிழுக்கு டப்பாகியுள்ள சில இந்தி சீரியல்கள் பிரமாதமாகவும், பிரமாண்டமாகவும் இருப்பதைப்பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

அப்படியென்றால் இந்தி ரீமேக் தொடர்களில் நடிப்பீர்களா?

ஒரு ஆர்ட்டிஸ்டா எல்லா விதமான கதைகளிலும் நடிக்க ஆசை உள்ளது. அதிலும் அவர்களின் கதை, காட்சி அமைப்புகள் நம்மளை விட வித்தியாசமாககூட உள்ளது. முக்கியமாக ஒரே மாதிரியாக இல்லாமல் குடும்ப பிரச்சினை மட்டுமின்றி, கல்லூரி போன்ற ஜாலியான கதைகளிலும் வருகிறது. அதனால், அந்த மாதிரி தொடர்களில் சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். அதேசமயம், இந்தி தொடர்களில் சினிமாக்களில் காட்சிகள் வருவது போன்று ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகள் வைக்கிறார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான காட்சிகளில நடிக்க மாட்டேன். அப்படி நடிக்க பிடிக்காமல்தான் சினிமாவில் நடிப்பதைகூட நான் தவிர்த்து வருகிறேன்.

சீரியல்களில் அதிக வேலைப்பளு இருப்பதாக கூறப்படுகிறதே?

உண்மைதான், ஒரே நாளில் 10,12 சீன்கள்கூட எடுக்கிறார்கள். இதனால் காலையில் ஸ்பாட்டுக்கு செல்லும் நாங்கள் மாலை வீடு திரும்பும் வரை துளியும் இடைவேளை இல்லாமல் நடிக்கிறோம். சில சமயங்களில் மதியம் சாப்பிடகூட நேரம் இருக்காது. அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ஓடுவோம். அந்த வகையில், டிவி சீரியல்களில் நடிப்பவர்களை கசக்கிப்பிழிகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார் துர்கா.

மீண்டும் சின்னத்திரையில் மதுமிதா

சின்னத்திரையில் காமெடி நடிகையாக அறிமுகமான மதுமிதா ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். சினிமாவில் காமெடி நடிகைளுக்கு பஞ்சம் இருப்பதால் மதுமிதா ஒரு ரவுண்ட் வருவார் என்றே கணிக்கப்பட்டது. ஓகே ஓகேவுக்கு பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. அதில் தாதாவின் மனைவி பேபியாக நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது.

கோவை சரளா, மனோரமா மாதிரி தனி காமெடி நடிகையாக உருவெடுப்பார் என்று கருதப்பட்ட மதுமிதாவுக்கு பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி விட்டார் தற்போது மடிபாக்கம் மாதவன், சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். என்றாலும் முனி 3யில் முக்கியமான காமெடி ரோலில் நடித்திருக்கிறார். அந்த படம் வெளிவந்தால் தனக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் என்று நம்புகிறார்.

ஈராக்கில் இருந்து ISIS நோக்கி ராக்கெட் அடிக்கும் 9 வயதுச் சிறுவன் இவன் தான்!

ஈராக்கின் எல்லை புற நகரங்களில், ISIS பயங்கரவாதிகள் ஊடுருவி வருகிறார்கள். இவர்களை எதிர்த்து அமெரிக்க படைகளும் ஈராக் ராணுவமும் போராடி வருகிறது. ஆனால் சில நகரங்களை அந்த நகரத்தில் உள்ள மக்களே பாதுகாத்து வருகிறார்கள். பெண்கள் சிறுவர்கள் கூட ஆயுதங்களை ஏந்திப் போராடி வருகிறார்கள். இங்கே நீங்கள் பார்பது ஈராக்கில் உள்ள நகரம் ஒன்றில் 9 வயதுச் சிறுவன் ராக்கெட் குண்டுகளை ஏவுவது தான். இவன் ISIS பயங்கரவாதிகள் இருக்கும் திசை நோக்கி ராக்கெட் குண்டுகளை ஏவி வருகிறான்.

காரில் பொருத்தப்பட்டுள்ள இக் குண்டுகளை இவன் ஏவுவதை, சிலர் படம் எடுத்து இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். ISIS பயங்கரவாதிகள் நகரங்களுக்குள் வந்தால், அவர்கள் அந்த நகரில் உள்ள மக்களை அடிமைகளாக்கி பெண்களை பாலியல் கைதிகள் ஆக்குகிறார்கள். இதனால் தம்மை பாதுகாக்க,  பொதுமக்களே போராடவேண்டி உள்ளது.

மட்டக்களப்பில் மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்! ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீது ஆயுததாரிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இரண்டு வெள்ளை நிற வான்களின் துப்பாக்கிகள், பொல்லு மற்றும் கத்திகளுடன் வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.தே.க.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரச்சாரத்திற்கு பொறுப்பான க.மோகன் தெரிவித்தார்.

இதன்போது இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோது முறைப்பாட்டினை பெற்றுக் கொள்வதில் இழுத்தடிப்புகள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்தபோதிலும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

கேள்வி கேட்ட இளைஞர் ஒருவர் மீது பிள்ளையான் கடும் தாக்குதல்! இளைஞன் வைத்தியசாலையில்!

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை மேடையில் வைத்து கேள்வி கேட்ட இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கலுதாவலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

23 வயதான குறித்த இளைஞர் மகிந்தவுக்கு ஆதரவான பிரசார மேடையில் வைத்து, மகிந்த இனப்படுகொலைகளை புரிந்துள்ளமை எங்களுக்கு தெரியும். அந்த வகையில் நீங்கள் என்ன சாதனை செய்திருக்கிறீர்கள் என்று பிள்ளையானை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை அடுத்து பிள்ளையான் தமது உதவியாளரான பிரசாந்தனிடம் ஏவி, குறித்த இளைஞரை பிடித்து வாகனம் ஒன்றினுள் வைத்து கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கவலைக்கிடமான முறையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம கைது!

காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கைக்கு திரும்பிய நிலையில் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி வதுருவ பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்காக அமைக்கப்பட்ட மேடையொன்றை சேதப்படுத்தியமையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து கடத்திச் சென்றமை தொடர்பில் நிஸாந்த முத்துஹெட்டிகமவுக்கு நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் பிடியாணை பிறந்திருந்தது. இந்த நிலையிலேயே அவர், நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.

பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம சிங்கப்பூரிலிருந்து இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

தூக்குத் தண்டனையை திரும்ப கொண்டு வருவதால் எதுவும் மாற்றம் நிகழப் போவதில்லை: பான் கீ மூன்

தூக்குத் தண்டனையை திரும்ப கொண்டு வருவதால் எதுவும் மாற்றம் நிகழப் போவதில்லை என்று ஐநா சபையின் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளார்.

 பாகிஸ்தானில் தீவிரவாதிகள் ராணுவ பள்ளியில் தாக்குதல் நடத்தியதில் அதிர்ந்து போனது பாகிஸ்தான் அரசு. தீவிரவாதிகளை அறவே ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் பாகிஸ்தான் பிரதமர், முதல் நடவடிக்கையாக அந்நாட்டில் தூக்குத் தண்டனை ரத்து எனும் சட்டத்தை ரத்து செய்தார். அடுத்து உடனடியாக இரண்டு தூக்குத் தண்டனை கைதிகளுக்கு தூக்கு விதிக்கப்பட்டது.

இப்போது விமானத் தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளை அழித்து வருகிறது. இதுவரை தீவிரவாதத் தலைவன் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறையில் இருக்கும் தீவிரவாதிகளையும் உடனடியாக அடுத்தடுத்து தூக்கில் போட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ள நிலையில் மரணத் தண்டனை ரத்து என்று இருந்த சட்டத்தை ரத்து செய்து திரும்ப தூக்குத் தண்டனையை கொண்டு வருவதால் எதுவும் மாற்றம் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்று ஐநா செயலர் பான் கீ மூன் கூறியுள்ளார். அதோடு பாகிஸ்தான் மரண தண்டனை ரத்து என்றும் சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

162 பேருடன் சிங்கப்பூர் அருகே மாயமானது மற்றுமொரு மலேசிய விமானம் : தொடரும் பதற்றம்!

இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற ஏர் ஏசிய விமானம் இன்று ஞாயிற்றுக் கிழமை 155 பயணிகள் மற்றும் 7 பணிக்குழுவினருடன் காணாமல் போயுள்ளது.

காலை 8.30 மணிக்கு சிங்கப்பூரை சென்றடைய வேண்டிய ஏர் ஏசிய விமானம், 7.42 மணிக்கு கட்டுப்பாட்டு தொடர்பிலிருந்து திடீரென துண்டிக்கப்பட்டு விட்டதாக சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

விமானம் ஜாவா கடற்பகுதிக்கு மேல் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்ததாக இந்தோனேசிய போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன நடந்தது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதோடு மேலும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்புதிய விமான மாயம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தற்போது காணாமல் போயுள்ளதும் மலேசியாவுக்கு சொந்தமான ஏர் ஏசிய விமானம் என்பது மலேசியர்களை மேலும் கவலை அடைய செய்துள்ளது. QZ8501 எனும் விமானமே தற்போது மாயமாகியுள்ளது. இந்த வருடத்தில் இவ்வாறு மாயமாகியிருக்கும் மூன்றாவது மலேசிய விமானம் இதுவாகும்.

இறுதியாக கிடைத்த தகவல்களின் படி மோசமான காலநிலை காரணமாக குறித்த விமானத்தின் பாதையை மாற்றுவதற்கு விமானி அனுமதி கோரியுள்ளார்.

குறித்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 156 இந்தோனேசியர்களும், மூன்று தென் கொரியர்களும் ஒரு பிரெஞ்சு நாட்டவரும், ஒரு மலேசியரும், ஒரு சிங்கப்பூர் வாசியும் அடங்குவர். அதோடு 17 குழந்தைகள் அடங்குவர்.

14 வயது சிறுவன் உயிரை பறித்த பொலிஸ்

கனடா - பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வாகனத்தில் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் மோதியதில் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

அபொற்ஸ்வோட் என்ற இடத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம் ஒரு மரத்திற்கு அருகில் நடந்ததால் பல வாலிபர்கள் அவ்விடத்தில் கூடி தங்கள் அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்.

உடனடியாக விமான மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்ட போதும் பலத்த காயங்கள் காரணமாக அந்த சிறுவன் இறந்து விட்டான்.

நடந்த இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவன் 14வயதுடைய மார்க்கஸ் லறாபி என குடும்பத்தினராலும் நண்பர்களினாலும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வாகனம் ஓட்டி வந்த அந்த பொலிஸ் அதிகாரி அப்போது பணியில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இயேசு பிறந்த நாளில் ரயிலில் பிறந்த குழந்தை: பிரசவம் பார்த்த பொலிஸ்

அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ்காரர்கள் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

பிலடெல்பியா சுரங்க ரெயில் நிலையத்தில் கடந்த வியாழன் மாலை 5.50 மணிக்கு, பணியில் இருந்த டேனியல் கேபன், டேரல் ஜேம்ஸ் இருவருக்கும் ஒரு அவசரமான அழைப்பு வந்தது.

உடனே இருவரும் அவசர அவசரமாக அந்த சுரங்க ரெயிலில் ஏறியபோது, குழந்தையின் தலை வெளியே தெரியும் நிலையில், பிரசவ வேதனையில் ஒரு பெண் துடித்துக் கொண்டிருந்தார்.

உடனடியாக அங்கிருந்த நிலையைப் புரிந்து கொண்ட கேபன், சுற்றியிருந்தவர்களை விலக்கி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவசரஊர்தியை வரவழைத்த பொலிசார், வெள்ளிக்கிழமை காலை அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாயும் சேயும் தற்போது ஆரோக்கியமாக இருக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்ததால் கிறிஸ் என்று பெயர் வைத்திருப்பதாக, குழந்தையின் தாய் யான் ஜின் லீ தெரிவித்துள்ளார்.

சரிவராத சயீத் அஜ்மல்: உலகக்கிண்ண கிரிக்கெட்டில் இருந்து விலகல்

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் உலகக்கிண்ணப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் மிரட்டல் சுழற்பந்து வீச்சாளரான சயீத் அஜ்மலின் பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதால் 3 மாதத்திற்கு முன்பு அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

அதனால் அவரது பந்து வீச்சை சரிசெய்ய சில மாதங்களாக முயற்சி எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு பலன் இல்லை. அவரது முழங்கை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரியை விட 40 டிகிரிக்கு மேல் வளைகிறது.

இந்த நிலையில் பெப்ரவரியில் தொடங்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்குள் பந்துவீச்சு குறையை சரிசெய்ய வாய்பில்லை என்பதால் உலகக்கிண்ண பாகிஸ்தான் அணியில் இருந்து அவர் விலகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகாரியார் கான் தெரிவித்துள்ளார்.

சங்கக்காராவை பின்னுக்கு தள்ளி டோனி உலக சாதனை

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் 134 ஸ்டம்பிங்குகள் செய்த டோனி உலக சாதனை புரிந்துள்ளார்.

மிட்செல் ஜான்சனை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றியதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அஸ்வின் வீசிய பந்தை நன்றாக மேலேறி வந்து ஆட முயன்று மிட்செல் ஜான்சன் பந்தைக் கோட்டைவிட டோனி சுலபமாக ஸ்டம்ப்டு செய்தார். இது இவரது 134வது சாதனை ஸ்டம்பிங்காக அமைந்தது.

டெஸ்ட் போட்டிகளில் 38, ஒருநாள் கிரிக்கெட்டில் 85, டி20 கிரிக்கெட்டில் 11 ஸ்டம்பிங்குகள் செய்து மொத்தம் 134 ஸ்டம்பிங்குகளுடன் இலங்கையின் குமார் சங்கக்காரா சாதனையை முறியடித்துள்ளார் டோனி.

சங்கக்காரா 133 ஸ்டம்பிங்குகளை மொத்தம் 485 இன்னிங்ஸ்களில் நிகழ்த்த, டோனியோ 460 இன்னிங்ஸ்களில் அந்த சாதனையைக் கடந்தார்.

கோஹ்லியின் தலைமையில் வீரராக தொடரலாம்: டோனியை விமர்சனப்படுத்திய கங்குலி

டெஸ்ட் போட்டிகளில் மோசமான நிலைக்கு இந்திய அணி செல்வதற்கு டோனியின் கேப்டன்சி அணுகுமுறையே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பொதுவாக டோனியை பாராட்டும் இயன் சாப்பல், அவுஸ்திரேலியாவை 216/5 என்ற நிலையிலிருந்து 530 ஓட்டங்கள் எடுக்க விட்டதற்கு காரணம் டோனியே என்று கூறியுள்ளார்.

கடந்த டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சனுக்கு ஷாட் பிட்ச் பந்துகளை வீசி பல்பு வாங்கிய இந்திய அணி இன்று பிராட் ஹேடின், ரயான் ஹேரிஸ் ஆகியோரிடம் மீண்டும் பல்பு வாங்கியது.

களத்தில் டோனியின் எந்த வித நோக்கமுமற்ற டோனியின் கேப்டன்சியினால் இந்திய அணி காயப்பட்டுள்ளது என்று இயன் சாப்பல் கூறியுள்ளார்.

கங்குலியும் டோனியின் டெஸ்ட் கேப்டன்சி மற்றும் பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் மீது தனது விமர்சனங்களைத் தொடுத்தார்.

டோனியின் தலைமை பற்றி அவர் கூறுகையில், இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்ல, தொடர்ந்து சிறிது காலமாக டோனி கேப்டன்சியில் தடுமாறுகிறார். டெஸ்ட் போட்டி மட்டத்தில் அவர் அணியை எந்த ஒரு நம்பிக்கையான நிலைக்கு அழைத்துச் செல்லவில்லை.

ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் சாதனைகள் புரிந்துள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரது கேப்டன்சி வீழ்ச்சிகளை சந்தித்து வருகிறது.

இந்திய அணியின் எதிர்காலம் விராட் கோஹ்லி தான் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணிக்கு தன்னம்பிக்கையும் ஆக்ரோஷமும் தேவை, கோஹ்லி ஒரு தன்னம்பிக்கை மிக்க அணித்தலைவர், ஆக்ரோஷமான அணித்தலைவர் நமது அணிக்கு இப்போது தேவை.

சச்சின் கேப்டன்சிக்கு பிறகு என் தலைமையின் கீழ் விளையாடினார். நான் டிராவிடின் தலைமையின் கீழ் ஆடினேன்.

டிராவிட் டோனியின் தலைமையின் கீழ் ஆடியுள்ளார். மைக்கேல் கிளார்க்கின் தலைமையில் பொண்டிங் விளையாடினார். எனவே ஒரு வீரராக டோனி தொடரலாம் என்று கூறியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்த கோஹ்லி, ரஹானே

மெல்போர்னில் நடைபெற்று வரும் 3வது டெஸ்டில் சதம் விளாசிய கோஹ்லி, ரஹானே புதிய சாதனையை படைத்துள்ளனர்.

3வது டெஸ்டில் இந்திய வீரர்கள் கோஹ்லி, ரஹானே சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். இவர்கள் இருவரும் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 262 ஓட்டங்கள் குவித்தனர். கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜோடி அடித்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.

ஒட்டுமொத்தமாக வெளிநாட்டு மண்ணில் ஒரு ஜோடி அதிக ஓட்டங்கள் அடித்ததில் இந்த ஜோடி 4வது இடத்தை பிடித்துள்ளது. 2004ம் ஆண்டு சச்சின்- லஷ்மண் ஜோடி சிட்னியில் 353 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது.

4வது மற்றும் 5வது இடத்தில் களம் இறங்கி இரு வீரர்களும் சதம் அடித்தது இது 4வது முறையாகும். இதற்கு முன் இந்திய வீரர்கள் சவுரங் கங்குலி, சச்சின், லஷ்மண் ஆகியோர் இதுபோல் மூன்று முறை சதம் அடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 1000 ஓட்டங்கள் குவித்த 10வது இந்திய வீரர் கோஹ்லி ஆவார். இவர் இன்றைய சதத்துடன் ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.

‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் 400 ஓட்டங்களுக்கு மேல் எடுப்பது இது 2வது முறையாகும். இதற்கு முன் 1983ம் ஆண்டு அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும்போது இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்களை தாண்டியிருந்தது.

ஒரு தொடரில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 3 சதம் அடித்த இரண்டாவது வீரர் கோஹ்லி. இதற்கு முன் சுனில் கவாஸ்கர் 1977ம் ஆண்டு அவுஸ்திரேலியா தொடரில் மூன்று சதங்கள் அடித்திருந்தார். ஆனால், 4வது வீரராக களம் இறங்கி சதம் அடித்த ஒரே வீரர் இவராவார்.

6 சதங்கள் அடித்து வெளிநாட்டு மண்ணில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கோஹ்லி 6வது இடத்தைப் பெற்றுள்ளார். சச்சின் 18 சதத்துடன் முதல் இடத்திலும், கவாஸ்கர் 15 சதத்துடன் இரண்டாவது இடத்திலும், டிராவிட் 14 சதங்களுடன் 4வது இடத்திலும், லஷ்மண் 8 சதங்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

ஒரு தொடரில் 5வது வீரராக களம் இறங்கி 3 முறை அரை சதத்தை கடந்த வீரர் ரஹானே ஆவார். இதற்கு முன் சவுரவ் கங்குலி 5 இடத்தில் களம் இறங்கி 3 முறை அரை சதத்திற்கு மேல் ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

சதம் விளாசிய கருணாரத்னே: இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது இலங்கை

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே 2வது இன்னிங்ஸில் சதம் விளாசினார்.

இலங்கை–நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 441 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 138 ஓட்டங்களில் சுருண்டு ‘பாலோ ஆன்’ ஆனது.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை நேற்றைய 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 84 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. இலங்கை தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே அபாரமாக விளையாடி தனது முதல் சத்தை அடித்தார். அவர் 152 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

3வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 293 ஓட்டங்கள் குவித்தது. இதன் மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது.

2015 கன்னி ராசிக்கு எப்படி?

கன்னி:

"கன்னியான் ஏய்க்கப்படுவான்" என்பதற்கேற்ப யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும்.

எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு:

இந்த வருடத்தில் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதேநேரம் இக்கட்டான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்கவும். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டால் உங்கள் செயல்கள் அனைத்தும் திட்டமிட்டபடி குறிக்கோள்களை எட்டும்.

ஏமாற்றங்களிலிருந்து தப்பிப்பீர்கள். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் திடீரென்று பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீரும். தீயவர்கள் உங்களை விட்டு தாமாகவே விலகி விடும் அதிசயம் நிகழும். அதேநேரம் இளைய சகோதரர்களுடனான உறவில் சில சலசலப்புகள் ஏற்படும். ஆனாலும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு அவற்றை சமாளிப்பீர்கள். சிலர் தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்குக் குடிபெயர்வார்கள்.

தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். உங்கள் புகழும், கௌரவமும் உயரும். இது நாள் வரை தேவையற்ற வீண் பழி சுமந்த சில வாசகர்கள், அவற்றிலிருந்து விடுபடுவார்கள். உங்களின் முயற்சிகள் பல மடங்காக உயர்ந்து, அதற்கேற்ற வெற்றி கிடைக்கும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் துரிதமாக நடக்கும். குடும்பத்தில் அரங்கேறும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்க நேரலாம். கவனத்துடன் அதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

இந்த ஆண்டு உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும். வருமானம் நல்ல முறையில் வந்தாலும், சிலருக்கு குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு நேர் வழியில் செல்லவும். இதன்மூலம் பல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள்.

வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும்.

அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆயினும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். சில நிறுவனங்களால் முந்தைய காலகட்டத்தில் நேரிட்ட மன வருத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.

பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள். மற்றபடி அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு குழப்பங்களைத் தவிர்க்கவும்.

மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். முடிந்தால் வியாழக்கிழமைகளில் 27 கருப்புக் கொண்டைக் கடலைகள் கட்டிய மாலைகள் இரண்டை குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அணிவித்துப் பலன் பெறுங்கள்.

புருஷசூக்தம் பாராயணம் செய்யவும். துளசியை பெருமாளுக்கு படைத்துவர வாழ்வில் புத்தொளி பிறக்கும்.

2015 சிம்ம ராசிக்கு எப்படி?

சிம்மம்:

"ஸிம்ஹத்தானோடு சிணுங்கேல்" என்பதற்கேற்ப உங்களிடம் யாராவது வம்பிழுத்தால் அவ்வளவுதான், உடனே சிங்கம் பிடரியை சிலுப்பி எழும்புவது போல எழுந்து விடுவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு:

இந்த ஆண்டு இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும்.

மன அழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். வம்பு, வழக்குகளிலிருந்தும் விடுபட்டு புதிய மனிதனாக ஆவீர்கள். ஆன்மீகத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருப்பதால் புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசுவீர்கள். உங்களைப் பற்றிப் புறம் பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து நாசூக்காக விலகி விடுவீர்கள். கையிருப்புப் பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். மேலும் குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம்.

நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் நன்றாகவே முன்னேறுவீர்கள். சிலருக்கு நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் சூழ்ச்சிகளில் சிக்கும் சூழல் ஏற்படலாம். ஆனாலும் முருகக் கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டு விடுவீர்கள். அரசாங்கம் வாயிலாக சிறு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவை விரைவில் மறைந்துவிடும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். இக்காலகட்டம், உங்களை கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வைப்பார் சனி பகவான்.

நெடு நாளைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். நிலையான புகழும், பெருமையும் அடைவீர்கள். இதனால் நீங்கள் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உங்கள் மன வலிமை அதிகரிக்கும். உங்கள் செயல்களில் சுறுசுறுப்பு கூடும். உங்களை நீங்களே அறிந்து கொண்டு சமுதாயத்திற்குப் பயன்படுவீர்கள். தெய்வ வழிபாட்டிற்குத் தக்க பலன் கிடைக்கும். உங்களின் காரியங்களைப் பொறுமையாகவும், அமைதியாகவும் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கத் தொடங்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் கால தாமதம் ஏற்படலாம்; உடலில் சோர்வும், மனதில் தெளிவின்மையும்கூட உண்டாகலாம். உங்களுக்கு உறுதுணையாக இருந்து வந்த மேலதிகாரிகளின் ஆதரவு சற்று குறையக் கூடும். உங்களின் கடமைகளை பதற்றப்படாமலும், நிதானத்துடனும் செய்தால் எந்தச் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம்.

வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். வாணிப வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும்.

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்பை அதிகப்படுத்திக்கொண்டு, கர்வத்தை விட்டொழித்துத் திறந்த மனதுடன் இயங்கினால் புகழ் பெறலாம். மற்றபடி சக
கலைஞர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் சில முடிவுக்கு வரும்.

பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்து மற்றும் விழாக்களில் கலந்துகொண்டு உற்காசம் அடைவீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

பரிகாரம் : தினமும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும். த்ரியம்பகம் என்று ஆரம்பிக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்யவும். செந்தாமரை மலரை அமாளுக்கு சாத்திவர தீமைகள் அகலும்.

ரஹானே, கோஹ்லி அபார சதம்: ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதிரடியாய் விளையாடிய ஹானே, கோஹ்லி ஆகியோர் சதம் விளாசினர்.

இவ்விரு ஆணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 336 ஓட்டங்களை எடுத்திருந்தது இந்திய அணி. இதனால் ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டது.

முன்னதாக இன்றைய ஆட்டத்தை 108 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் தொடங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே புஜாராவை 25 ஓட்டங்களுக்கு இழந்தது. பின்னர் நிலைத்து ஆடி வந்த முரளி விஜய் 68 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் கோலி இணை வெகு சிறப்பாக ஆடி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டனர்.

ரஹானே விரைந்து ஆடி 127 பந்துகளிலேயே சதத்தை எட்டினார். அதே போல் மறுமுனையில் ஆடி வந்த கோஹ்லியும், லயன் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டி 166 பந்துகளில் சதத்தைக் கடந்தார்.

ரஹானே லயன் பந்து வீச்சில் 147 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 140 ஓட்டங்கள் குவித்த நிலையில் கோஹ்லி விளையாடி வருகிறார்.

Saturday, December 27, 2014

இன்றைய ராசி பலன் 28-12-2014 | Raasi Palan 28-12-2014

மேஷம்
நன்மைகள் நடைபெறும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். இருப்பினும், அடுத்தடுத்த செலவுகள் தொடரலாம். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

ரிஷபம்
யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் ஏற்படும். எதிர்பாராத தனலாபம் வந்து சேரலாம்.

மிதுனம்
தொட்டகாரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

கடகம்
பொறுப்புகள் கூடும் நாள். அடுத்தவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழ்ச்சியைத் தரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வேலைப்பளு குறையும். வழிபாடு வளர்ச்சி தரும்.

சிம்மம்
காரிய வெற்றிக்கு கதிரவனை வழிபட வேண்டிய நாள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது நல்லது. கூட்டுத் தொழிலில் உங்கள் கருத்துக்களை கூட்டாளிகள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகம் தான்.

கன்னி
இனிமையான நாள். திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். நண்பர்கள் கைகொடுத்துதவ முன்வருவர்.

துலாம்
சவால்களை சமாளிக்கும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். பெண் வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும்.

விருச்சகம்
நட்புவட்டம் விரிவடையும் நாள். வருமானம் இருமடங்காகும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கை கொடுத்துதவுவர். பயணம் பலன் தரும்.

தனுசு
வாகன யோகத்தால் வளம் காணும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். பெற்றோர் வழியில் பெருமைக்குரிய தகவல் வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும்.

மகரம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். ஏட்டிக்கு போட்டியாக செயல்பட்ட உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். நீண்ட நாளைய பிரச்சினையன்று சுமூகமாக முடியும்.

கும்பம்
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பொன்&பொருள் வாங்க அஸ்தி வாரமிடுவீர்கள்.

மீனம்
மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள். ஆரோக்யம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

இணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்!

பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாணப் படங்கள் மற்றும் காதலனுடன் நெருக்கமாக உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், தென்மேற்கு பருவக்காற்று, போராளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வசுந்தரா.

இவர் தனது காதலனுடன் மிக அந்தரங்கமாக உள்ள படங்களை செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அவற்றில் சிலவற்றில் டாப்லெஸ் மற்றும் முழு நிர்வாண கோலத்திலும் உள்ளார். கையில் கைப்பேசி வைத்தபடி, காதலனை விட்டு படமெடுக்க வைத்துள்ளார்.

இந்தப் படங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகிவிட்டன. இவரது ஆபாச காணொளியும் வெளியாகிவிட்டது. இந்த தகவல்கள் வெளியில் பரவியதுமே, இன்ஸ்டாகிராம் கணக்கை வசுந்தரா அழித்துவிட்டார்.

ஆனால் அதிலிருந்து முன்பே படத்தை டவுன்லோடு செய்த சிலர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட வேறு சமூக இணையதளங்களில் அந்தப் படங்களை அனுப்பிவிட்டனர்.

இதனால் உலகெங்கும் வசுந்தராவின் நிர்வாணப் படங்கள் வலம் வந்து கொண்டுள்ளன.

வசுந்தராவின் புகைப்படத்தை பார்க்க கிளிக் செய்யவும்...

ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்கள்!

ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்களை பட்டியலிடுகிறார் சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் கீர்த்தனா. அவை.....

1. மனதை லேசாக்குங்கள்

மனதைப் பொறுத்துதான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும். மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். உடல் உறுப்புகளை வலிமை படுத்தினால் உணர்வுகள் சரியாகிவிடும்.

புத்துணர்வும் கிடைக்கும். ஹெல்தி உணவு, சுவாசம், தோற்ற அமைப்பு (posture) போன்றவை சரியாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். மனம் ஆரோக்கியம் பெற அமைதியான சூழல், அளவான, ஆழ்ந்த தூக்கம் அவசியம்.

2. தியானம் பழகுங்கள்

பிரபஞ்சத்திலிருந்து நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி தியானத்துக்கு உண்டு. இது நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்தும். தியானம் செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடனே எந்நேரமும் இருக்கும் சுவாசத்தைக் கவனிக் கலாம். காலை வேளையில் அடிவயிற்றிலிருந்து வெளிவரும் மூச்சுச் செல்லும் பாதையைக் கவனிக்கலாம். நாளடைவில் எண்ண ஓட்டங் கள் குறைந்து மூச்சை கவனிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். இதுவே தியானம் செய்த பலனை கொடுத்துவிடும்.

3. உணவுக்கு மதிப்பளியுங்கள்

உண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். டிவி பார்த்துக் கொண்டே என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே சாப்பிடுவது சரியான முறையல்ல.

தரையில் உட்கார்ந்து உணவை ரசித்து ருசித்து மென்று சாப்பிட தொடங்கினால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்குப் பலத்தைத் தரும்.

உண்ணும் போது கறிவேப்பிலை, மிளகு, தக்காளி போன்றவற்றைத் தூக்கி எரிந்துவிட்டு சாப்பிடுவது சரியான உணவுப் பழக்கம் அல்ல. தூக்கி எறிவதற்காக எந்தப் பொருளும் சமையலில் சேர்ப்பது கிடையாது. அனைத்தையும் சாப்பிடவே உணவு சமைக்கப்படுகிறது.

4. தன்னை நேசிக்கத் தொடங்குங்கள்

நம்மை நாமே விரும்புவதும், அக்கறையோடு நேசிக்கவும் தொடங்குங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத் தி அரவணைப்பது போலத் தங்களின் மேல் அக்கறை கொண்டு சரிவரப் பராமரித்துக் கொள்வதும் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும். உடலும் மனமும் மகிழ்ச்சி அடையும். மன அழுத்தம், மன சோர் வுக்கான தீர்வு வெளியில் அல்ல நம்மிடமே இருக்கிறது. உடலுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனதுக்கும் தந்து அதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு பூர்த்தி செய்யுங்கள்.

5. உடலுழைப்பை உருவாக்குங்கள்


உடலுழைப்பு சார்ந்த வேலை இன்று பலருக்கும் இல்லை. ஆதலால், உட லுழைப்பை நாமே உருவாக்கலாம்.

காலை, மாலை உடற்பயிற்சி செய்வது, கீழே உட்கார்ந்து சாப்பிடுவது, அருகில் இருக்கும் கடைக்கு நடந்து செல்லுவது, வீட்டுப் படிகளில் ஏறி இறங்குவது, வீட்டை சுத்தப்படுத்துவதில் மெஷின்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, உடலுழைப்புக்கு என விடுமுறை நாட்களை ஒதுக்கி வைப்பது என உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடலாம்.

6. உணவுப் பழக்கத்தைச் சீராக்குங்கள்

காலை உணவை தவிர்த்தல், ஒரு வேளை தானே என்று துரித உணவுகளைச் சாப்பிடுதல், ஆரோக்கியத்தைப் புறந்தள்ளிவிட்டு, சுவைக்கு அடிமையாதல், அடிக்கடி விரதம் இருத்தல், சுகாதாரமற்ற உணவை உட் கொள் ளுதல் போன்ற பழக்கங்களைத் தவிர்க்கலாம்.

பசித்த பிறகு சாப்பிடும் பழக்கத்தைத் தொடங்கலாம். அனைத்து உணவுகளையும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. எப்போதும் டிரீட், பார்ட்டி போன்றவற்றை மதிய வேளையில் வைத்துக் கொள்ளுங்கள். இரவில், டின்னர் பார்ட்டியை தவிருங்கள்.

- ப்ரீத்தி
vikatan

கே.பி.யின் பெண் கதாபாத்திரங்கள்... தமிழ் சினிமாவின் இனிப்பான புதிர்கள்!

‘காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே
அடங்கிவிடாது..
மங்கை நெஞ்சம்
பொங்கும்போது விலங்குகள் ஏது?''

-கங்கையாய் பிரவாகம் எடுத்து ஓடும் பெண்களின் மனதை சங்குக்குள் அடைக்கும் முயற்சியில் தனி முத்திரைப் பதித்தவர் இயக்குநர் கே.பாலசந்தர். தமிழ்ச் சினிமாவில் நாற்பதாண்டுகள் பணியாற்றிய நிலையிலும் இறுதிவரை இளைஞராக இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று இந்தியாவின் பிரதான மொழிகளில் 100 படங்களை இயக்கி முடித்து, கடைசி வரை ‘நாட் அவுட் பேட்ஸ் மேனாக’ மட்டையை உயர்த்திக் காண்பித்து, களத்தில் நின்று நிதானித்து ஆடியவர்.

‘மை ஃபிலிம் இஸ் மை மெசேஜ்’ என்று தனது திரைப்படங்களில் பட்டவர்த்தனமாக சொன்னவர். தமிழ்ச் சினிமாவில் இவரது படைப்புகள் ஒவ்வொன்றுமே வித்தியாசமான பரீட்சார்த்தமான முயற்சிகள். அவை வந்த கால கட்டத்தைத் தாண்டி சிந்திக்கப்பட்டவை.

கமல், ரஜினி என்ற இரண்டு சகாப்தங்களையும் தந்தவர் என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, இவரது படங்களில் சித்தரிக்கப்பட்ட பெண் கதா பாத்திரங்கள் ரசிகர்களின் நெஞ்சைவிட்டு நீங்காதவை. இன்றளவும் தொலைக்காட்சியில் இவரது படங்கள் ஒளிப்பரப்பாகும்போது நம்மை அறியாமலே ரிமோட்டை கீழே வைத்துவிடுகிறோம். பலமுறை பார்த்த படம் என்றாலும், நம்மை அறியாமல் அந்த பாத்திரங்கள் கட்டிப் போட்டுவிடும் வலிமை வாய்ந்தவை.

பெண்களின் உள்ளத்து உணர்வுகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும், அவர்களின் சமூகக் கோபங்களையும் பெண்களைவிட மிகச் சிறப்பாக திரையில் வெளிப்படுத்தி வெற்றி கண்டவர். பெண்களின் உளப்பாங்கை எழுத்தில் கொண்டு வந்தவர் எழுத்தாளர் பாலக்குமாரன் என்றால், அவருக்கு முன்பே அதை செலுலாயிடில் பதிவு செய்தார் கே.பி.

‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாதான் இன்றைய எல்லா சீரியல் நாயகிகளுக்கும் தாய். அதைத் தொடர்ந்து, ‘அரங்கேற்றம் லலிதா’, ‘அபூர்வராகங்கள் பைரவி’, ‘மரோசரித்ரா ஸ்வப்னா’, ‘வறுமையின் நிறம் சிவப்பு தேவி’, ‘நினைத்தாலே இனிக்கும் சோனா’, ‘சிந்துபைரவி சிந்து’, ‘மனதில் உறுதி வேண்டும் நந்தினி’, ‘புதுப்புது அர்த்தங்கள் கீதா என்று இவரது பெண் கதாபாத்திரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஏனென்றால் பாத்திரத்தின் சிருஷ்டியிலேயே சம்பவங்களைக் கருக்கொள்ளச் செய்யும் கனம் வாய்ந்தவை.

தமிழ்ச் சினிமாவில் அந்த காலம் தொட்டு இந்த  காலம் வரை, நம் இயக்குநர்கள் சிருஷ்டித்து வைத்திருக்கும் பெண்களின் பிம்பம் அலாதியானது. பொதுவில் ஹீரோவுக்கு, ஹீரோயின் ஒரு சப்போர்ட்டிங்க் ஆர்ட்டிஸ்ட்டாகவும், பலவேளைகளில் ஹீரோ ரிலாக்ஸ்டாகப் பாடித் திரியும் ஜோடியாகவும்தான் வருகிறார். இது படம் பார்க்கும் ரசிகர்களும் தங்களின் ஆதர்ஷ ஹீரோயின்களுடன், தாங்களும் கனவு ஸீனில் டூயட் பாடவே உதவி இருக்கிறது. ஒரு வேளை படமாக்கப்பட்ட விதம் சரியாக இல்லாமல் இருந்தால், ஹாரிடாரில், ‘தம்’ அடித்துவிட்டு வர உதவியிருக்கிறது.

பெண் அடக்கமானவளாய், கணவனுக்காக, காதலனுக்காக சர்வபரி தியாகத்துக்கும் தயாரானவளாகவே காண்பிக்கப்பட்டு வந்தாள். இதை எல்லாம் தாண்டி பெண்ணினத்தின் பெருமையை பெண்களின் நளினத்தை சுந்தரவதனத்தை வெளிக்கொண்டு வந்தவர்கள் ஸ்ரீதர், பீம்சிங், கே.எஸ்.ஜி, ஏ.பி.என். என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனால், ‘மாத்தி யோசி’ என்கிற விதமாக உண்மை, நேர்மை, மனவலிமை மிக்க பெண் கதா பாத்திரங்களை கே.பி.யைப் போல் வேறு எவரும் படைத்துக் காண்பிக்கவில்லை.

திரைப்படத் துறையில் கோலோச்சிய கே.பி.சுந்தராம்பாள், பத்மஸ்ரீ.பானுமதி இருவரும் சுதந்திரமும், ஆளுமையும் மிக்க நட்சத்திரங்களாக திரை உலகில் வலம் வந்தார்கள். அவர்கள் கேமராவுக்கு முன்பாக எப்படி இருந்தார்களோ அதே கேரக்டரில்தான் கேமராவுக்குப் பின்பாகவும் இருந்தார்கள். சுதந்திரமாகவும், சுயமாகவும், தெளிவாகவும் முடிவு எடுக்கும் அற்புதமான இந்த வகை பெண்ணாக முதன்முதலில் தோன்றி அசத்திய பாத்திரம், ‘அவள் ஒரு தொடர் கதை கவிதா’ தான்.

பொறுப்பற்ற தந்தையால் அல்லல்படும் நடுத்தர வர்க்க குடும்பம். தங்கைகள் மற்றும் தம்பிகளின் நல்வாழ்வுக்காக தன் வாழ்க்கையை மெழுகாக உருக்கிக்கொள்ளும் வித்தியாசமான கதாபாத்திரம். தமிழ்நாட்டின் ஏ, பி, சி என்று அனைத்து சென்டர்களிலும் உள்ள பெண்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட படம். இன்னமும் தன் குடும்ப மேம்பாட்டுக்காக எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் சிலிப்பர் செருப்பும், கைப்பையுமாக பணிக்குப் போகும் எத்தனையோ மூத்த பெண்களுக்கு இந்த கவிதா பாத்திரம்தான் ஆதர்ஷ குறியீடு.

ஆனால், ‘அவள் ஒரு தொடர் கதை’யின் வெற்றி கே.பி.க்கு வேறு விதமான புதிய சிக்கலைத் தோற்றுவித்தது. வித்தியாசமான கதைகளை, கதைக் களன்களை பின்புலமாகக் கொண்ட படங்களை இயக்கி தனது முத்திரையைப் பதிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது.

ஏற்கனவே, ‘சர்வர் சுந்தரம்’, ‘நாணல்’, ‘நீர்க்குமிழி’, மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘புன்னகை’, ‘நூற்றுக்கு நூறு’, ‘வெள்ளி விழா’, ‘நான் அவனில்லை’ என்று வித்தியாசமான பல கதைகளைப் படமாக்கி இருந்தாலும், அவள் ஒரு தொடர்கதைக்குப் பின் அவரது பாதையிலும், படங்களிலும் நிறையவே மாற்றங்கள் வரத் தொடங்கின.

‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘அவர்கள்’, ‘மரோ சரித்ரா’, ‘தப்புத் தாளங்கள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘நூல் வேலி’, ‘நிழல் நிஜமாகிறது’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘சிந்துபைரவி’, ‘புன்னகை மன்னன்’, ‘புதுப்புது அர்த்தங்கள்’, மற்றும் ‘வானமே எல்லை’ என்று அவரது பயணம் நீண்டுகொண்டே செல்கிறது. ஒவ்வொரு படமும் அவருக்கே அவருக்கான முத்திரையுடன் கூடிய செலுலாய்டு சித்திரங்கள்.

வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் தன் மனதுக்கு சரியென்று பட்டதைப் படமாக்கி வந்ததை அவரது எல்லாப் படங்களிலும் பார்க்கலாம். ‘எந்தவித வர்த்தக சமரசமும் செய்துகொள்ளாமல் நான் என் படைப்பை தந்துள்ளேன்’ என்று அநேகர் இன்றைக்கு வேண்டுமானால் எல்லோரும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அன்றைக்கும்... ‘ஒன் அண்டு ஒன்லி’ கே.பி மட்டும்தான். இன்னும் சொல்லப்போனால், இத்தகையை ரசிகர்களை தயார் செய்யவும், இத்தனை இளம் இயக்குநர்களுகு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்ததும் இவர்தான்.

எழுபதுகளின் மத்தியில் வந்த ‘அவள் ஒரு தொடர் கதை சுஜாதா’ பாத்திரத்தின் தொடக்கப் புள்ளி ‘இருகோடுகள்’ சௌகார் ஜானகிதான். கண்டிப்பு, வைராக்கியம்,  தியாகம், கோபன் என்று கே.பி பின்னாளில் படைத்த அநேக கதாபாத்திரங்களின் தாய் பாத்திரம் இந்த ஜானகி பாத்திரம்,.

இதற்கு நேர் கான்ட்ராஸ்ட்டாக கே.பாலசந்தரின் இன்னொரு படைப்பு பொசஸ்ஸிவ் நேச்சர் கேரக்டர். இதற்கும் தாய் பாத்திரம் இருகோடுகள் ஜெயந்திதான். இந்த பாத்திரத்திற்கு கணவனைத் தாண்டி வேறு உலகம் இல்லை. அவன் தனக்குத்தான், தனக்கு மட்டும்தான் என்று எண்னுகிற ரகம்.

புதுப்புது அர்த்தங்கள் கீதா, பாலசந்தரின் பெண் கதாபாத்திரங்களில் சிறந்த கதாபாத்திரம். இந்த வகை ‘பொசஸ்ஸிவ் நேச்சர்’ பெண்களை மணந்த கணவர்களைப் போன்று புண்ணியம் செய்தவர்களும் கிடையாது, பாவம் செய்தவர்களும் கிடையாது. ரகுமான், கீதா, சித்தாரா ஆகிய மூன்று பேரையும் கொண்டு வண்ணத்தில் எழுதப்பட்ட நேர்த்தியான கவிதை.

இந்த படத்தின் கிளைமாக்ஸ், மனநல காப்பகத்தில் இருந்து கீதாவை மீட்பது போல் முடியும். இந்த கீதாவின் முடிவில்தான், ‘அக்னி சாட்சி’ படம் தொடங்கும். ஆனால், ‘அக்னி சாட்சி’ வந்து பல ஆண்டுகள் கழித்துதான் ‘புதுப்புது அர்த்தங்கள்’ வந்தது. கே.பி என்னும் படைப்பாளியின் மனதில் இந்த பாத்திரங்கள் முன்னும்பின்னுமாக அசை போடப்பட்டு வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அக்னி சாட்சி சரிதாவும் பொசஸ்ஸிவ் நேச்சர் கேரக்டர்தான்.

சங்கீதம், இங்கீதம், நளினம் ஆகியவற்றின் மொத்த உருவமாக சிந்து பைரவியில் சிந்துவாக வந்து ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார் சுஹாசினி. பளீர் சிரிப்பும், பளிச் பேச்சும், சிவகுமாருடன் செய்யும் தர்க்கங்களும் நம் நெஞ்சைவிட்டு நீங்காதவை. ‘இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ, நாடோடிப் பாட்டுக்கு தாய் தந்தை யாரோ’ என்ற வரிகள் கல் நெஞ்சையும் கலங்க வைத்துவிடும்.

பெண்ணின் மனம் அடையும் பரவச உணர்வுகளை... சோகங்கள்... கோபங்கள்... எல்லாம் அந்த கதாபாத்திரங்கள் பாடும் பாடல்களில் பீறிட்டுக் கிளம்பும். காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி (அவர்கள்), ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல் (அபூர்வ ராகங்கள்), அழகான இளமங்கை கட்டில் கொடுத்தாள் (தப்புத் தாளங்கள்), கண்ணான கண்மணியே கண்ணுறங்கு சூரியனே (தண்ணீர் தண்ணீர்), ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் (புன்னகை மன்னன்), பாடறியேன் (சிந்து பைரவி) என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

சந்தர்ப்பச் சூழலினால் வீட்டு விளக்கு, வீதி விளக்கான சமுதாயத்தின் விதிவிலக்குகளையும் இவர் சொல்லத் தவறவில்லை. அரங்கேற்றமும், தப்புத் தாளங்களும் விலைமகளிரைப் பற்றிய கதைகள்தானென்றாலும் வேறு வேறு தளங்களில் நடந்தவை.

கே.பி வடித்த பெண் சுதாபாத்திரங்களிலேயே தவறான பத்திரம் கல்கிதான். முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் துரோகம் செய்த கணவனை பழிவாங்க கல்கி எடுத்த முடிவு விபரீதமானது. அவள் ஒரு தொடர்கதை கவிதா காய்ந்த பால் என்றால் கல்கி கசந்துபோன தீய்ந்த பால்.

இந்த பாத்திங்களை எல்லாம்விட வெகு இயல்பாக அவர் சிருஷ்டித்த அருமையான பாத்திரப் படைப்பு வறுமையின் நிறம் சிவப்பு ஸ்ரீதேவிதான். தமிழில் ஸ்ரீதேவி மிக சிறப்பாக நடித்த படங்கள், வறுமையின் நிறம் சிவப்பு, ஜானி மற்றும் மூன்றாம் பிறை. இதில் வறுமையின் நிறம் சிவப்பில் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் கஷ்ட, நஷ்டங்களை, துயரங்களை அதன் போக்கிலேயே ஏற்றுக்கொள்ளும் வெகு இயல்பான பாத்திரம்.

இப்படியாக திரையில் கே.பி. வடித்த பெண் கதாபாத்திரங்கள் மற்ற படங்களில் வரும் ஹீரோயின்களில் இருந்து மாறுபட்டு நிற்கிறார்கள். ‘சில வேளைகளில் இந்த பாத்திரங்கள் முன்னுக்குப் பின் முரணாக தவறான முடிவுகளை எடுப்பது ஏன்?’ என்று அவரை ஒருமுறை கேட்டபோது, ‘பெண் மனம் அப்படித்தான்’ என்கிறார்.

பெண்களின் உள் மன ஆசை அபிலாஷைகளை அவர்களின் வித்தியாசமான, துணிச்சலான, சிந்தனைகளை இவர் அளவுக்கு தமிழில் வேறு எந்த இயக்குநரும் சொல்லவில்லை. இவர் படைத்த பெண் கதாபாத்திரங்கள் மிகையானவையா? சரியானவையா? என்றால், இவரது நினைத்தாலே இனிக்கும் சோனா (ஜெயப்ரதா)வைப் போல் தலையை பக்கவாட்டில் இரண்டு முறை அசைத்துவிட்டு, பிறகு மேலும் கீழுமாக ஆட்ட வேண்டியதுதான்.

ஏனென்றால் கே.பி.யின் பெண் கதாபாத்திரங்கள் தமிழ்ச் சினிமாவின் இனிப்பான புதிர்கள்!

எஸ்.கதிரேசன்
vikatan

எங்களை யாரும் பிரிக்க முடியாது! - தடைகளைத் தாண்டிய காதல்

'ஒருவனுக்கு காதல் நிராகரிக்கப்பட்டால் அந்த இடத்தைப் பணம் பிடித்துக் கொள்கிறது!’ என்று புகழ்பெற்ற எழுத்தாளர் டி.ஹெச்.லாரன்ஸ் சொல்லியிருக்கிறார். கோவையிலும் அது நிஜமாகியிருக்கிறது. ஆனால், எல்லா எதிர்ப்புகளையும் முறியடித்து கரம் பிடித்திருக்கிறது ஒரு காதல் ஜோடி.

சினேகா, ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர். எம்.பி.ஏ பட்டதாரி. இவரது தந்தை கோவையில் பிரபலமான துணிக்கடை ஒன்றின் உரிமையாளர். முகமது முக்தார், கோவை பொன்விழா நகரைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு நடனப் பள்ளியில் டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார். இவர்கள் இருவரையும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சந்தித்தோம்.

'சினேகா எம்.பி.ஏ. படிக்குறப்போ, அவரை ஒரு காபி ஷாப்புல சந்திச்சேன். பார்த்ததும் காதல்னு சொல்லுவாங்க இல்லையா... சினேகாவைப் பார்த்ததும், 'வாழ்ந்தா இவளோடுதான் வாழணும்னு தோணுச்சு!’ காதலை சினேகாகிட்ட சொல்ல கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. ஆனாலும் நான் சொல்லாமல் அவங்களே புரிஞ்சுகிட்டாங்க. மூணு வருஷமா காதலிச்சோம். இந்த நேரத்துல சினேகாவுக்கு அவங்க வீட்டுல தீவிரமாக மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாங்க. அதனால நாங்க கல்யாணம் பண்ணிக்க முடிவு செஞ்சோம். டிசம்பர் மூணாம் தேதி பெரியார் படிப்பகத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷன்ல மனு கொடுத்தோம். ஆனா, போலீஸ் எங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கலை. போலீஸ் ஸ்டேஷன்லயே என்கிட்ட எழுதி வாங்கிட்டு கிளம்புனு மிரட்டுனாங்க. போலீஸ் ஸ்டேஷன் பாதுகாப்பில்லைனு அட்வகேட் ஆபீஸுக்கு போனோம். அங்கேயும் எங்களை பிரெய்ன் வாஷ் பண்ணுனாங்க. அந்த சமயத்துல அல் உம்மா தலைவர் பாட்ஷாவின் மகன் சித்திக் அலியும் சிலரும் வந்தாங்க. எங்களுக்கு ஆதரவா பேசுறது மாதிரி அங்கிருந்து எங்களைக் கூட்டிட்டு போனாங்க. எங்களை சேர்த்து வைக்கறாங்கனு நெனைச்சோம். ஆனா, ஒரு வீட்டுல எங்களை அடைச்சு வெச்சாங்க. 'ஒழுங்கா ரெண்டு பேரும் பிரிஞ்சிடுங்க. இல்லைனா அவ்வளவுதான்’னு மிரட்டினாங்க. நாலாம் தேதி ராத்திரி அங்கிருந்து தப்பிச்சோம். ஆனா, சித்திக் அலி எங்களை பிடிச்சுட்டார். ரோட்டுல வெச்சு என்னை அடிச்சு  திரும்பவும் வீட்டுக்கு இழுத்துட்டு போனார்.

'ஒழுங்கா அந்தப் பொண்ணை விட்டுட்டு போயிடு. இல்லைன்னா உங்க அப்பா அம்மாவை கொன்னுடுவோம்’னு சித்திக் அலி மிரட்டினார். வேற வழியில்லாம ரெண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷன்ல எழுதி கொடுத்துட்டு பிரிஞ்சிட்டோம். ரெண்டு நாளுக்கு அப்புறம் ஃபேஸ்புக்ல ஒரு மெசேஜ் பார்த்தேன். 'அடைக்கலம் தேடிவந்த பெண்ணை மூணு கோடி ரூபாய்க்கு விற்ற அல் உம்மா பாட்ஷா மகன்’ என்று சித்திக் பத்தி யாரோ எழுதி இருந்தாங்க. அப்போதான் சினேகாவோட அப்பாகிட்ட பணம் வாங்கி எங்களை பிரிச்சு வெச்சது தெரியவந்துச்சு. ரெண்டு பேரும் பிரிஞ்சு வாழ சிரமப்பட்டோம். இந்த நேரத்துலதான் சினேகா அவங்க வீட்டுல இருந்து வெளியேறி, எங்க வீட்டுக்கு வந்தாங்க. இப்போ திரும்பவும் காவல் துறையிலும், நீதித் துறையிலும் பாதுகாப்பு கேட்டு வந்திருக்கோம்' என்று மொத்த கதையையும் சொல்லி முடித்தார் முக்தார்.

தனது அலுவலகத்துக்குள் நுழைந்து, மிரட்டி காதல் ஜோடியை கடத்திச் சென்றதாக வழக்கறிஞர் விஜயராகவன் கொடுத்த புகாரின் பேரில், சித்திக் அலி உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

''பாட்ஷாவின் மகன் என்கிற ஒரே காரணத்துக்காக சித்திக் அலி மீது பொய் கேஸ் போடுறாங்க'' என்றார் சித்திக் அலியின் தாயார் ரஷீதா பேகம்.

காதல் ஜோடிக்கு திருமணத்தை நடத்திவைத்த தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். 'முக்தாரும் சினேகாவும் டிசம்பர் 3-ம் தேதி எங்களை நாடினார்கள். இருவருக்கும் 24 வயதாகிறது. இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்துள்ளனர். ’மதம், பணம் ஆகிய பிரச்னைகளால் பெற்றோர் எங்களை ஏற்கமாட்டார்கள். எங்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என்று அவர்கள் கடிதம் மூலம் கேட்டார்கள். அவர்களிடம் அனைத்து ஆவணங்களையும் பெற்று எங்கள் அலுவலகத்தில் திருமணம் செய்து வைத்தோம்' என்றார்.

சினேகா முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டார். இப்போது, அவரது பெயர், ஷயானா ஃபாத்திமா. 'நான் விருப்பப்பட்டுத்தான் முக்தாரை கல்யாணம் செஞ்சுகிட்டேன். எங்க சமூகத்துல காதல் திருமணத்தை ஏத்துக்க மாட்டாங்க. இதை பெரிய கௌரவப் பிரச்னையா பார்ப்பாங்க. அதனாலதான் இத்தனை பிரச்னைகளும். சாதி, மதம், பணம் எல்லாத்தையும்விட அன்புதான் பெரியது. அதுல நாங்க உறுதியா இருக்கோம். எங்களை யாரும் பிரிக்க முடியாது' என்று உறுதியாகச் சொல்கிறார்.

பணத்தாலும் பலத்தாலும் பிரிக்கக்கூடியதா காதல்?

ச.ஜெ.ரவி
vikatan

எவனா இருந்தாலும் வெட்டுவேன் - விஷால் ஆவேசம்!

’Hip Hop தமிழா’ புகழ் ஆதி இசையமைத்திருக்கும் முதல் தமிழ்ப்படம் விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கியிருக்கும் ஆம்பள. ஏற்கனவே வெளியான ‘பழகிக்கலாம்’ பாடலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஆம்பள படத்தின் முழு ஆல்பமும் இன்று(27.12.14) சத்யம் திரையரங்கில் ரிலீஸானது.

குஷ்பூ, ஆர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உட்பட பலரும் கலந்துகொண்ட இவ்விழா கலகலப்பாகவே நடைபெற்றது. லேட்டாக வந்தாலும் கலகலப்பாக பேசத்துவங்கிய ஆர்யா ‘ஆம்பள’ என்ற டைட்டிலை ‘அம்பாள’ என்று படித்ததெல்லாம் சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.


அதன்பிறகு விஷாலின் டைட்டிலுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம் என்பதை விளக்கும்போது ஆர்யா “படம் பொங்கல் ரிலீஸ்னு கேள்விபட்டதும் ‘என்ன மச்சான் பொங்கலுக்கு நிறைய படம் ரிலீஸாகுது. நீயும் ரிலீஸ் பன்ற பாத்துக்கடா’ அப்படினு சொன்னபோது எவனா இருந்தாலும் வெட்டுவேன்” என்று விஷால் சொல்லியதை போட்டு உடைத்தார்.

ஆம்பள படத்தின் இசையைப் பற்றி பேச மைக்கை பிடித்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக ‘விஷால் தான் உண்மையான ஆம்பள’ என்று அவர் திருட்டு டிவிடி விற்பவர்களை பிடித்துக் கொடுத்ததைக் குறிப்பிட்டு பேசினர்.

வழக்கம்போலவே விஷாலின் ரசிகர் மன்றத்தின் சார்பாக ஆளுயர மாலை ஒன்று விஷாலுக்கு ரசிகர்கள் மூலமாக அவருக்கு அணிவிக்கப்பட்டது. இந்தமுறை அந்த மாலை விஷாலின் காரிலேயே வந்து சேர்ந்தது சிறப்பு.

ஜெயலலிதா, ரஜினிகாந்தைவிட ஷங்கர்தான் பெரிய ஆள்: ராம்கோபால் வர்மாவின் அடுத்த சர்ச்சை

இயக்குர் ராம் கோபால் வர்மா, தனது டுவிட்டர் பக்கம் மூலம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.   அதுவும் நடிகர் ரஜினிகாந்த் பற்றி, அவரை குறைத்து மதிப்பிடும்படியாக தொடர்ந்து டுவிட் செய்து வருகிறார். கோச்சடையான் படம் குறித்து கமெண்ட் அடித்து, ரஜினி ரசிகர்களின் ஏச்சுக்களை வாங்கிக்கட்டிக்கொண்டார்.  தற்போது ரஜினியோடு சேர்த்து, ஜெயலலிதா பற்றியும் கமெண்ட் அடித்துள்ளார்.

 ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் தளத்தில்,  ‘’இப்போதுதான் ''ஐ'' படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தேன். இந்த சங்கராந்தி கண்டிப்பாக சங்கரின் ராத்திரியாக மாறும். 'ஐ' படத்துக்கு போட்டியாக எந்தப் படத்தை வெளியிட்டாலும் மடத்தனமே.

இந்திய இயக்குநர்கள் ஒவ்வொரும் ஏன் நம் எல்லைகளை நாம் இன்னும் விரிவுபடுத்தவில்லை என யோசிக்க வைக்கும் திரைப்படமாக 'ஐ' இருக்கும்.

இந்தியப் படங்களை ஹாலிவுட் கவனிக்க 'ஐ' ஒரு காரணமாக இருக்கும். நம் கவனத்தைக் கவரும், மின்சாரம் பாய்ந்ததைப் போல உற்சாகமூட்டும் வகையில், ரஜினிகாந்தைவிட ஷங்கர் உயர்ந்து நிற்கிறார். ஷங்கர் அடுத்து ஆமிர்கானுடன் இணையும் திரைப்படம், இந்தியாவின் 'அவதார்' ஆக இருக்கும்.

'ஐ' படத்தின் முதல் நாள் வசூல், லிங்காவின் வசூலை முந்தும் என்பது என் கணிப்பு. அதனால் தான் ரஜினியை விட ஷங்கர் பெரிய ஆளாகத் தகிழ்கிறார் என்று சொல்கிறேன்.

பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் ஷாரூக், சல்மா, ஆமிர் போன்ற நட்சத்திரங்களை நம்பி இருக்கையில், ஷங்கர் அந்த நட்சத்திர அந்தஸ்தை உடைத்தெறிந்துள்ளார். அதுதான் அவரது சக்தி.

ஷங்கர், எனக்கு உங்கள் ட்விட்டர் முகவரி தெரியாது, ஆனால் உங்களிடம் ஒன்று சொல்ல நினைக்கிறேன். தற்போது ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகில் இருக்கும் ஒரே ஒரு முன்னோடி நீங்கள்தான். ஆகச் சிறந்த கற்பனை, அடர்த்தி, அசலான பார்வை என்ற வகையில் 'ஐ' ஒரு முன்மாதிரியாக இருக்கும்.

'ஐ' ட்ரெய்லரை பார்த்த பின் பொதுமக்களில் ஒருவனாக எனக்கு தோன்றுவது, தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ரஜினிகாந்தைவிட ஷங்கர்தான் பெரிய ஆள்’’என்று கூறியிருக்கிறார்.

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றமாட்டோம்: மைத்திரி

வடக்கிலிருந்து இராணுவத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப் போவதில்லை என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தாம் உருவாக்கும் புதிய அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புச் சபையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிகம பகுதியில் நேற்று வெள்ளிக்கிமை இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை. யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்கள், முப்படை தளபதிகள் வெளிநாடுகளில் தூதர்களாக செயற்படுகின்றனர்.

எமது புதிய அரசாங்கத்தில் யுத்த வெற்றியை எதிர்கொண்ட தளபதிகளை மீள நாட்டிற்கு அழைத்து தேசிய பாதுகாப்புச் சபையை நாம் பலப்படுத்துவோம். இந்த நாட்டை பிளவுபடுத்த விடமாட்டோம். முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்” என்றுள்ளார்.

தேவயானி கொப்ரகடே மீது ஒழுங்கு நடவடிக்கை:சையத் அக்பருதீன்

தேவயானி கொப்ரகடே மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை செயலர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

தேவயானி அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதராக இருந்தபோது பணிப்பெண்ணுக்கான விசா பெறுவதற்கு முறைகேடாக ஆவணங்கள் சமர்ப்பித்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, இன்றுவரை அவருக்கு அமெரிக்க விசா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இவர் மீது சுமத்தப்பட்ட வழக்கும் அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தேவயானி கோப்ரகடே யாருக்கும் தெரிவிக்காமல், தமது இஷ்டத்துக்கு தமது மகனுக்கு அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதனால் தேவயானி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் சையத் அக்பருதீன் தகவல் வெளியிட்டுள்ளார்.

பெண் குழந்தையைக் காப்போம்,பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் :பிரதமர்

பெண் குழந்தையைக் காப்போம்,பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் எனும் புதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற நிலையில் பல்வேறு புதியத் திட்டங்களை அதிரடியாக அவ்வப்போது அறிவித்து, அதன் செயல் திட்டங்களிலும் இறங்கி விடுகிறார்.இதை பலர் ஆதரித்தாலும், எதிர்க்கட்சிகள் குறைக் கூறாமல் இல்லை. அப்படி வருகிற ஜனவரி மாதம் 22ம் திகதி ஹரியானாவில் உள்ள பானிப்பட் மாவட்டத்தில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்போம் என்கிற புதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார்.

பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது என்பது ஒரு சமுதாயத்துக்கே கல்வி அளிப்பது போன்ற பலனை கொடுக்கும் என்றும் மோடி தமது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இன்னமும் பெண் குழந்தைகளை காப்பகத்தில் விட்டுவிடுவது என்பதும், பெண் குழந்தைகள் என்றால் கல்வி மறுக்கப்படுவது என்பதும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது பிரதமரின் இந்த அறிவிப்பின் மூலம் தெள்ளத் தெளிவாகிறது என்பதுதான் உண்மை.

மலேசியாவில் கடும் வெள்ளம்:160 000 பேர் இடப்பெயர்வு

மலேசியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதளவு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கெலாந்தன் உட்பட குறைந்தது 8 மாநிலங்களில் இருந்து 160 000 இற்கும் அதிகமானவர்கள் இன்று சனிக்கிழமை இடம் பெயர்ந்திருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இத்திடீர் அனர்த்தத்தையடுத்து சனிக்கிழமை மலேசியப் பிரதமர் நஜீப் ரஷாக் தனது அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்து விட்டு பாதிக்கப் பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்றுள்ளார். மேலும் வெள்ள நிவாரண நிதிக்காக சுமார் 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப் படும் எனவும் நஜீப் அறிவித்துள்ளார். வழமையாக மலேசியாவின் வடகிழக்குக் குடா நாடு மொன்சூன் எனும் பருவ மழை பெய்யும் போது ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் பாதிக்கப் படும் பகுதியாகும். ஆனால் இவ்வருடம் பருவ மழை கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது அதிகம் எனவும் இதனால் வெள்ளப் பெருக்கும் மிகையாக உள்ளது எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் மலேசியப் பிரதமர் அந்நாட்டிலுள்ள தேசிய பாதுகாப்புச் சபை, தேசிய அனர்த்த முகாமை அமைப்பு, மீட்புக் குழுக்கள், மாநில அரசு மற்றும் உள்ளூர் அவசர நிலை உதவியாளர்கள் ஆகியோரைக் கூட்டி நிவாரண நடவடிக்கைகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆலோசனை செய்திருந்தார். தற்போது வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இடங்களில் மின்சாரம், குடிநீர் மற்றும் உணவுத் தட்டுப்பாடுகளால் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். கடைகளும் வர்த்தக நிலையங்களும் மூடப் பட்டுள்ளன. மேலும் ஆயிரக் கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

மற்றவர்களை மயக்க வேண்டுமா? இதோ சூப்பர் பேஷியல்

பேஷியல் என்பது நம் சருமத்தை பொலிவாக மட்டுமின்றி மிருதுவாகவும் வைப்பதற்காகவும் செய்யப்படுவதாகும்.

சருமத்தை அழகாக்குவதில் ஒயின், வோட்கா போன்றவை சிறப்பான இடத்தை பெறுகின்றன.

ஆனால் மற்ற மதுபான பேஷியல்களை ஒப்பிடுக்கையில் வோட்கா பேஷியல் சற்று வித்தியாசமானது.

வோட்கா பேஷியல்

இரவில் படுக்கும் முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள்.

காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும்.

இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

இதை அடிக்கடி பூசிக்கொள்வதால் நாளடைவில் உங்கள் முகம் மிருதுவாவதை காணலாம்.

முகத்தில் உள்ள சுருக்கங்கள், பருக்களுக்கு இந்த பேஷியல் ஒரு சிறந்த மருந்து.

வெயிலில் செல்லும் முன்பு இதை போட்டுக் கொண்டு சென்றால் சருமம் மாசுபடாமல் இருக்கும்.

இந்த பேஷியலை முடித்துவிட்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள். முகம் பளபளப்பதை கண்கூடாக பார்க்க முடியும்.

புத்துணர்ச்சி அளிக்கும் வாழைப்பழம்

இயற்கையின் குளுக்கோஸ் என்றழைக்கப்படும் வாழைப்பழம் நமக்கு எண்ணற்ற சத்துக்களை அள்ளித் தருகிறது.

மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது வாழை, இதன் அனைத்து பாகங்களுமே மனிதனுக்கு நன்மையை விளைவிக்க கூடியவை.

* இயல்பாகவே சிலருக்கு உடல் உஷ்ணமாக இருக்கும், இவர்கள் தினமும் இரவு உணவுக்கு பிறகு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.

* தினமும் பூவன் பழம் சாப்பிட்டு வந்தால், நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.

* உடல் நிலை சரியில்லாமல் போய் மெல்ல மெல்ல மீண்டு வருபவர்கள் தினமும் ஒரு பூவன்பழம் சாப்பிட்டால் உடல் சோர்வு, தளர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

* மஞ்சள் காமாலை நோய் நீங்கிய பின்னரும் கண்களில் தேங்கும் மஞ்சளை ரஸ்தாளி பழம் நீக்கும் வல்லமை கொண்டது.

* செவ்வாழையில் வைட்டமின்-ஏ சத்து ஏராளமாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

* நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால், இதயம் வலிமையாகும், மூச்சு சீராகும்.

குறிப்பாக வாழைப்பழத்தை சாப்பிட்ட பின் ஒரு டம்ளர் சூடான தண்ணீர் குடிப்பது சிறந்தது.