Saturday, December 27, 2014

புத்துணர்ச்சி அளிக்கும் வாழைப்பழம்

இயற்கையின் குளுக்கோஸ் என்றழைக்கப்படும் வாழைப்பழம் நமக்கு எண்ணற்ற சத்துக்களை அள்ளித் தருகிறது.

மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது வாழை, இதன் அனைத்து பாகங்களுமே மனிதனுக்கு நன்மையை விளைவிக்க கூடியவை.

* இயல்பாகவே சிலருக்கு உடல் உஷ்ணமாக இருக்கும், இவர்கள் தினமும் இரவு உணவுக்கு பிறகு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.

* தினமும் பூவன் பழம் சாப்பிட்டு வந்தால், நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.

* உடல் நிலை சரியில்லாமல் போய் மெல்ல மெல்ல மீண்டு வருபவர்கள் தினமும் ஒரு பூவன்பழம் சாப்பிட்டால் உடல் சோர்வு, தளர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

* மஞ்சள் காமாலை நோய் நீங்கிய பின்னரும் கண்களில் தேங்கும் மஞ்சளை ரஸ்தாளி பழம் நீக்கும் வல்லமை கொண்டது.

* செவ்வாழையில் வைட்டமின்-ஏ சத்து ஏராளமாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

* நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால், இதயம் வலிமையாகும், மூச்சு சீராகும்.

குறிப்பாக வாழைப்பழத்தை சாப்பிட்ட பின் ஒரு டம்ளர் சூடான தண்ணீர் குடிப்பது சிறந்தது.

No comments:

Post a Comment