Sunday, December 28, 2014

பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம கைது!

காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கைக்கு திரும்பிய நிலையில் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி வதுருவ பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்காக அமைக்கப்பட்ட மேடையொன்றை சேதப்படுத்தியமையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து கடத்திச் சென்றமை தொடர்பில் நிஸாந்த முத்துஹெட்டிகமவுக்கு நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் பிடியாணை பிறந்திருந்தது. இந்த நிலையிலேயே அவர், நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.

பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம சிங்கப்பூரிலிருந்து இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment