அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதிரடியாய் விளையாடிய ஹானே, கோஹ்லி ஆகியோர் சதம் விளாசினர்.
இவ்விரு ஆணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 336 ஓட்டங்களை எடுத்திருந்தது இந்திய அணி. இதனால் ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டது.
முன்னதாக இன்றைய ஆட்டத்தை 108 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் தொடங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே புஜாராவை 25 ஓட்டங்களுக்கு இழந்தது. பின்னர் நிலைத்து ஆடி வந்த முரளி விஜய் 68 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் கோலி இணை வெகு சிறப்பாக ஆடி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டனர்.
ரஹானே விரைந்து ஆடி 127 பந்துகளிலேயே சதத்தை எட்டினார். அதே போல் மறுமுனையில் ஆடி வந்த கோஹ்லியும், லயன் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டி 166 பந்துகளில் சதத்தைக் கடந்தார்.
ரஹானே லயன் பந்து வீச்சில் 147 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 140 ஓட்டங்கள் குவித்த நிலையில் கோஹ்லி விளையாடி வருகிறார்.

 
No comments:
Post a Comment