Thursday, December 25, 2014

கடற்கரைக்கு காதலனோடு சென்ற கல்லூரி மாணவியை கற்பழித்த பொலிஸ்?

நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது பொலிஸ்காரரா என்பது குறித்து கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்த 19 வயது பெண், கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் இதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவரை காதலித்தார்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை, நீலாங்கரை அருகே உள்ள அக்கரை கடற்கரைக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பும்போது, மோட்டார்சைக்கிளில் பொலிஸ் உடையில் வந்த ஆசாமி, அவர்களை மிரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மாணவியை மட்டும் விசாரணை என்று கூறி அழைத்துச்சென்ற அந்த ஆசாமி, ஒரு அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி புகார் அளித்தார்.

இதுபற்றி நீலாங்கரை பொலிசார் வழக்கு பதிவு செய்தனர், இந்த வழக்கில் மர்ம ஆசாமி குறித்து துப்புதுலக்குவதற்காக, 4 தனிப்படைகளை அமைத்து, பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

கல்லூரி மாணவியை மிரட்டி அழைத்து சென்று கற்பழித்தது பொலிஸ்காரரா? என்பது குறித்து தனிப்படை பொலிசார் விசாரணை நடத்துகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் மருத்துவபரிசோதனை அறிக்கை வந்த பிறகு உண்மை தகவல்கள் தெரியவரும் என்றும் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment