Sunday, December 28, 2014

மட்டக்களப்பில் மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்! ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீது ஆயுததாரிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இரண்டு வெள்ளை நிற வான்களின் துப்பாக்கிகள், பொல்லு மற்றும் கத்திகளுடன் வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.தே.க.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரச்சாரத்திற்கு பொறுப்பான க.மோகன் தெரிவித்தார்.

இதன்போது இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோது முறைப்பாட்டினை பெற்றுக் கொள்வதில் இழுத்தடிப்புகள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்தபோதிலும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment