Thursday, December 25, 2014

2015 புத்தாண்டு! தல ரசிகர்களுக்கு ட்ரீட்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் என்னை அறிந்தால் திரைப்படத்தின் ‘அதாரு அதாரு’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் முழு இசை ஆல்பம் புத்தாண்டு தினத்தன்று, அதாவது டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 12.00 மணிக்கு யூடியூபில் வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறது என்னை அறிந்தால் படக்குழு. இசை வெளியீடு பற்றிய தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்களே தவிர, நிகழ்ச்சியாக நடைபெறவில்லையென்று வருத்தப்படவில்லை.

எப்படியும் அஜித் நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என்பதால் அஜித் ரசிகர்கள் அந்த விழாக்களையும் எதிர்பார்க்கவில்லை. புத்தாண்டு ட்ரீட்டாக வெளியாகும் என்னை அறிந்தால் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

No comments:

Post a Comment