வாரக் கணக்குல வெத்தல போட்டாலும், வாயோரத்துல ரெட் வைக்கலேன்னா குத்தம் வெத்தல மீதா, போட்டவங்க மீதான்னு பட்டி மன்றம் வச்சாலும், ப்ரியா ஆனந்தின் பின்னடைவுக்கு காரணம் கண்டு பிடிக்க முடியாது போலிருக்கு.
அவர் நடிக்கும் படமெல்லாம் போன வேகத்தில் ரிட்டர்ன் ஆகிவிடுவதால், அக்காவின் செல்போன் நம்பரை ஒரேயடியாக எரேஸ் பண்ணிவிடும் மூடில் இருக்கிறது திரையுலகம்.
கடைசி வாய்ப்புதான் ‘வை ராஜா வை’. ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் இந்த படத்தை பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்று ரஜினியே பாராட்டியதாக தகவல்கள் வருகின்றன. இன்னும் சில வாரங்களில் ரிலீஸ். அதற்கப்புறமாவது ப்ரியா ஆனந்த் பிசியாவாரா? ஒரேயடியாக ஃப்ரியாவாரா? ஜோதிட சிகாமணிகள் சோழி உருட்டுங்க பார்க்கலாம்...

 
No comments:
Post a Comment