Friday, December 26, 2014

இன்றைய ராசி பலன் 27-12-2014 | Raasi Palan 27-12-2014

மேஷம்
எண்ணங்கள் எளிதில் நிறை வேறும் நாள். எதிர்காலம் குறிந்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

ரிஷபம்
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும்.

மிதுனம்
பக்குவமாகப் பேசிப் பாராட்டுக்களைப் பெறும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக் களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கடகம்
துயரங்கள் தீர துர்க்கையை வழிபட வேண்டிய நாள். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலையன்று முடியாமல் போகலாம். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு அதிகரிக்கும்.

சிம்மம்
நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும். உற்றார், உறவினர்கள் உதவிக் கரம் நீட்ட முன்வருவர்.

கன்னி
தைரியத்தோடு செயல்பட்டு சாதனை கள் படைக்கும் நாள். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் மாறும்.

துலாம்
பொன்னான நாள். பொருள் வர விற்கு அஸ்திவாரமிடுவீர்கள். புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமையடைவீர்கள்.

விருச்சகம்
யோகமான நாள். இல்லத்திற்கு தேவையானப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு
முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். உடன் பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

மகரம்
செல்வாக்கு மேலோங்கும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

கும்பம்
இறைவழிபாட்டால் இன்பம் அதிகரிக்கும் நாள். திடீர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்யோக மாற்றச் சிந்தனை உருவாகும்.

மீனம்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

No comments:

Post a Comment