Friday, December 26, 2014

வார்த்தைகளால் சீண்டிக் கொள்ளும் இந்திய வீரர்கள்: ஸ்டீவன் சுமித்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தற்போது தங்களுக்குள்ளே மோதிக் கொள்வதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்திய அணி வீரர்களை, அவுஸ்திரேலிய வீரர்கள் வார்த்தையால் சீண்டிக்கொள்ள தேவை இல்லை. அவர்கள் பற்றி அதிகம் பேச வேண்டியது கூட இல்லை.

தங்களுக்குள் மோதிக் கொண்டு புகார்களையும் தெரிவிக்கிறார்கள். எல்லாவற்றையும் எங்களுக்காக அவர்கள் செய்கிறார்கள். இந்த ‘உள்உரசல்’ இந்த டெஸ்டிலும் தொடரும் என்று நம்புகிறேன்.

தொடரை முழுமையாக கைப்பற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் 3-0 என்ற கணக்கில் கொண்டு சென்று, சிட்னியில் 4-0 என்ற கணக்கில் முடிப்போம் என்று உறுதியாக நம்புகிறேன்.

சொந்த மண்ணில் கடந்த ஓராண்டு காலமாக உண்மையிலேயே அபாரமாக விளையாடி வருகிறோம். வெளிநாட்டிலும் இதே போன்று வெற்றிகளை குவிப்பது தான் இப்போது எங்களுக்கு உள்ள சவாலாகும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment