மேஷம்
சிறப்பான நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கை கூடுவதற்கான அறிகுறி தோன்றும்.
ரிஷபம்
செவி குளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் அதிக ஆர்வம் ஏற்படும். வெளிவட்டார பழக்கம் விரிவடையும்.
மிதுனம்
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம்.
கடகம்
குழப்பங்கள் தீர குருவை வழிபட வேண்டிய நாள். நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல் நலத்தில் அக்கரை காட்ட வேண்டிய சூழ்நிலை உண்டு.
சிம்மம்
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். சொந்த பந்தங்களின் வருகை உண்டு. வாழ்க்கைத்துணை வழியே வரவு வந்து சேரும். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
துலாம்
இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சுற்றத்தாரின் வருகை உண்டு. உத்யோக அனுகூலம் ஏற்படும்.
விருச்சகம்
வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். விரதம், வழி பாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். வாகன யோகம் உண்டு.
தனுசு
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித் திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அரை குறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்த நடந்து கொள்வர்.
மகரம்
வருமானம் இருமடங்காகும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். இறைவழிபாடு இனிமை சேர்க்கும். திருமண முயற்சி வெற்றி தரும்.
கும்பம்
வளர்ச்சி கூடும் நாள். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கடைசி நேரத்தில் கை கொடுத்து உதவுவர். திடீர் பயணமொன்று உருவாகும்.
மீனம்
சுப விரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

 
No comments:
Post a Comment