இத்தாலியில் இறந்த கர்ப்பிணி பெண் ஒருவர் மூன்று மாதங்கள் கழித்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இத்தாலியிலுள்ள மில்லன்(Milan) நகரின் சான் ரஃபேல்(San Raphel) என்னும் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்(36) ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
6 மாத கர்ப்பிணியான அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் தீவிர ஆலோசனைக்கு பின் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என தீர்மானித்துள்ளனர்.
இதன்பின் கடந்த 3 மாதங்களாக மருத்துவக் கருவிகள் மூலம் செயற்கையாக பெண்ணின் உடல் உறுப்புகளை இயங்கச்செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரின் வயிற்றில் இருந்து, ஆண் குழந்தையை ஆரோக்கியமாக வெளியில் எடுத்துள்ளனர்.

 
No comments:
Post a Comment