Friday, December 26, 2014

மெக்கல்லம் அதிரடி சதம்! வலுவான நிலையில் நியூசிலாந்து

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.நாணய சுழற்சியில் வெற்ற இலங்கை அணித்தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். இதன்படி நியூசிலாந்து வீரர்கள் துடுப்பெடுத்தாடி வருகிறார்கள்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணித்தலைவர் பிரன்டன் மெக்கல்லம் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

சற்றுமுன்னர் வரை 4 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை நியூசிலாந்து பெற்றிருந்தது.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலில் டெஸ்ட் போட்டி கிறைஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஆடுகளம் புற்கள் நிறைந்ததாக முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மஹேல ஜெயவர்த்தனேவின் ஓய்வுக்கு பிறகு இலங்கை அணி களமிறங்கும் முதல் டெஸ்ட் இதுவாகும்.

காயத்தால் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேராத் இந்த டெஸ்டில் ஆடாதது இலங்கைக்கு சற்று பின்னடைவாகும்.

இதற்கு முன்பு 6 முறை நியூசிலாந்தில் விளையாடியுள்ள இலங்கை அணி அங்கு ஒரே ஒரு தடவை மட்டுமே(1995-ம் ஆண்டில்) டெஸ்ட் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment