Sunday, December 28, 2014

130வது ஆண்டு விழா: காங்கிரசில் இணையுமாறு குஷ்பு அழைப்பு!

காங்கிரஸ் கட்சியின் 130வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அக்கட்சியின் அனைவரும் இணையுமாறு நடிகை குஷ்பு அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 130வது ஆண்டு விழா (28ஆம் தேதி) கொண்டாடப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

மேலும், அங்கு கூடியிருந்த குழந்தைகளுக்கு சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.

நடிகை குஷ்பு

இதுகுறித்து சமீபத்தில் காங்கிரஸ் இணைந்த நடிகை குஷ்பு தனது டிவிட்டர் சமூக வலைதளத்தில், ''காங்கிரசின் 130வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நாளில் ஒவ்வொரும் காங்கிரசில் இணைந்து , ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது டிவிட்டரில், ''காங்கிரஸ் கட்சியின் 130வது தொடக்க தினம் இன்று கொண்டாடுவதை முன்னிட்டு காங்கிரசார் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் டி.என்.ஏ. காங்கிரஸ் கட்சி'' எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment