வடக்கிலிருந்து இராணுவத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப் போவதில்லை என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
தாம் உருவாக்கும் புதிய அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புச் சபையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிகம பகுதியில் நேற்று வெள்ளிக்கிமை இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை. யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்கள், முப்படை தளபதிகள் வெளிநாடுகளில் தூதர்களாக செயற்படுகின்றனர்.
எமது புதிய அரசாங்கத்தில் யுத்த வெற்றியை எதிர்கொண்ட தளபதிகளை மீள நாட்டிற்கு அழைத்து தேசிய பாதுகாப்புச் சபையை நாம் பலப்படுத்துவோம். இந்த நாட்டை பிளவுபடுத்த விடமாட்டோம். முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்” என்றுள்ளார்.

 
No comments:
Post a Comment