Friday, December 26, 2014

நடிகை நஸ்ரியா கணவர் மீது மோசடி புகார்

நஸ்ரியா கணவர் பகத்பாசில் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

நஸ்ரியா தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும் மலையாள நடிகர் பகத் பாசிலுக்கும் கடந்த வருடம் திருவனந்தபுரத்தில் திருமணம் நடந்தது.

இந்நிலையில், பகத்பாசில் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் பிரபல தயாரிப்பாளர் எம்.மணி புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, பகத்பாசிலை எனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தேன். அந்த படத்துக்கு ஐயர் இன் பாகிஸ்தான் என பெயரிடப்பட்டு இருந்தது.

இந்த படத்தில் நடிப்பதற்காக பகத் பாசிலுக்கு குறிப்பிட்ட தொகையை முன் பணமாக கொடுத்தேன். படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் படத்தில் இருந்து பகத்பாசில் திடீரென விலகிவிட்டார். கதை எனக்கு பிடிக்கவில்லை எனவே நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment