Friday, December 26, 2014

உதவி இயக்குனர்களை எரிச்சல்பட வைத்த மிஷ்கின்

மிஷ்கினுக்கு ‘மிரட்டல் மிஷ்கின்’ என்று அடைமொழி கொடுத்தால் கூட தப்பில்லை போலிருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே கமல்ஹாசனை வெளுப்பது என்று முடிவு செய்து வெளிப்படையாகவே வெளுத்துக்கொண்டிருக்கிறார் மனுஷன். கமல் காப்பியடிச்சா ஒத்துக்கிறீங்க, நான் காப்பியடிச்சா ஏன்யா கத்துறீங்க? என்பது மிரட்டல் மிஷ்கினின் அதட்டல் கேள்விகளில் ஒன்று. இந்த நிலையில் நீங்க கமல் ரஜினி இருவரை வச்சும் படம் இயக்குவீங்களா என்று ட்விட்டரில் அவரிடம் கேள்வி கேட்கப்பட, ‘மாட்டேன்’ என்று ஒரே வரியில் பதிலளித்து ஆச்சர்யம் ஏற்படுத்தியிருக்கிறார்.

தஞ்சாவூர் பெரிய கோவிலையே தம்மாத்துண்டு ரேஞ்சிலே வைத்து பதிலளித்திருக்கும் அவரை வியப்போடு பார்க்கிறது வலையுலகமும் திரையுலகமும்! அப்படியே இன்னொரு பஞ்சாயத்து. பிசாசு படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் படம் பார்க்க டிக்கெட் கேட்டு மிஷ்கினிடம் வந்தார்களாம். ‘டேய்... போங்கடா எல்லாரும்’ என்று அதட்டி விரட்டிவிட்டாராம்.

இதனால் பல உதவி இயக்குனர்களுக்கு எரிச்சலோ எரிச்சல்!

No comments:

Post a Comment