Friday, December 26, 2014

5 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்கள் குவித்த அவுஸ்திரேலியா

இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

முதலில் நாணயசுழச்சிறில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஜர்சும், வார்னரும் களம் இறங்கினார். டேவிட் வார்னர் ஓட்டங்கள் எதுவும் இன்றி யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஜர்சும் வாட்சனும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இந்த ஜோடி 115 ஓட்டங்கள் சேர்த்திருந்த போது ரோஜர்ஸ் சமி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் வாட்சனும் அஷ்வின் பந்தில் 52 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஸ்மித் நிலைத்து நின்று ஆட மறுபுறம் உள்ள வீரர்கள் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

மார்ஷ் 32 ஓட்டங்கள், பர்ன்ஸ் 13 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ஓட்டங்கள் குவித்துள்ளது.

அணித்தலைவர் ஸ்மித் 72 ஓட்டங்களுடனும் , ஹேடின் 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

அவுஸ்திரேலிய அணி 90 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்கள் எடுத்தது.

No comments:

Post a Comment