Saturday, December 27, 2014

பாக்சிங் டே: சுனாமியாய் சுழன்றடித்த ஷேவாக், மேக்குல்லம்

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்கு மறுநாள் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ‘பாக்சிங் டே’ என்று பெயர்.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, அயர்லாந்து போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் முன்பு பெரிய பாக்ஸ் வைக்கப்படும்.

ஆலயத்திற்கு வருபவர்கள் அதில் நன்கொடை வழங்குவார்கள். மறுநாள் அதாவது டிசம்பர் 26ம் திகதி அன்று அந்த பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கப்படும். பாக்சை திறக்கும் அந்த நாளை ‘பாக்சிங் டே’ என்கிறார்கள்.

பாக்சிங் டே எனப்படும் டிசம்பர் 26ம் திகதியில் தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. அதற்கு முன்பாகவே, 2003ம் ஆண்டு இந்தியா , அவுஸ்திரேலியா இடையே டிசம்பர் 26ல் மெல்போர்னில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில், இந்திய தொடக்க வீரர் வீரேந்திர ஷேவாக் 195 ஓட்டங்கள் விளாசி (233 பந்து, 25 பவுண்டரி, 5 சிக்சர்) சுனாமியாய் சுழன்றடித்தார்.

கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணித்தலைவர் பிரெண்டன் மெக்கல்லமும் 195 ஓட்டங்கள் விளாசி, இலங்கை அணியை சுனாமியாய் சின்னாபின்னமாக்கினார்.

No comments:

Post a Comment