Friday, December 26, 2014

சஞ்சய் தத்துக்கு மட்டும் இத்தனை பரோல் ஏன்?: மராட்டிய அரசு விசாரணை நடத்த உத்தரவு

சஞ்சய் தத்துக்கு மட்டும் இத்தனை பரோல் ஏன் என்று கேள்வி எழுப்பி பாஜக தலைமையிலான மராட்டிய அரசு விசாரணை நடத்த உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

1993ம் ஆண்டு சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட துப்பாக்கிகள் காரில் வைத்திருந்தார் என்று நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடைபெற்று வந்தது. விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு, அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்றரை வருடங்கள் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து இருந்ததால், மீதம் உள்ள மூன்றரை வருடங்கள் மட்டும் சிறைத் தண்டனை அனுபவித்தால் போதும் என்று உத்தரவுப் பிறப்பித்தது.

இதையடுத்து சஞ்சய் தத் மும்பை எரவாடா சிறையில் கடந்த வருடம் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட சில வாரங்களில் இருந்து நேற்று வரை 4 முறை பரோலில் வெளிவந்துள்ளார். நேற்று இரண்டு வார பரோலில் வெளிவந்த சஞ்சய் தத் கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகவும் உற்ச்சாகத்துடன் கொண்டாடி, தியேட்டருக்கு சென்று ஒரு ஹிந்தி சினிமாவும் குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளதைக் கண்ட அம்மாநில அரசு, சஞ்சய் தத்துக்கு மட்டும் இத்தனை முறை பரோல் ஏன் என்று விசாரிக்க உத்தரவுப் பிறப்பித்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment