Saturday, December 27, 2014

டோனியின் புதிய சாதனை

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் விக்கெட் காப்பாளரான மகேந்திரசிங் டோனி அதிகபடியாக பிடிகளை எடுத்துள்ளார்.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய வீரரான ஷான் மார்ஷ் 32 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மொகமது சமி பந்தில் டோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இது டோனிக்கு 251வது பிடியெடுப்பு ஆகும். இதன் மூலம் அவர் அதிக பிடியெடுப்பு நிகழ்த்திய விக்கெட் கீப்பர் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார்.

தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் மாரக் பவுச்சர் (532) பிடித்து முதலிடத்தில் பிடித்தார். ஷான் மார்ஷ் பிடியெடுப்பு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும் டோனி 50 பிடியெடுப்பு நிகழ்த்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணித்தலைவர் சுமித் இந்த தொடரில் இதுவரை 447ஓட்டங்கள் எடுத்துள்ளார். அவர் ஒரே தொடரில் அதிக அளவு ஓட்டங்கள் அடித்தது இந்த தொடரில் தான்.

வாட்சன் மெல்போர்ன் மைதானத்தில் அதிகபட்ச ஓட்டங்கள் அடித்துள்ளார். அவர் 8 இன்னிங்ஸில் ஒரு சதம் மற்றும் 5 அரை சதத்துடன் 500 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டுக்குப் பிறகு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக ஓவர்கள் வீசிய சுழற்பந்து வீச்சாளர் வரிசையில் அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார்.

அவர், 27 ஓவர்கள் வீசியுள்ளார். சயீத் அஜ்மல் கடந்த 2009ம் அண்டு 32 ஓவர்கள் வீசி முதலிடத்தில் உள்ளார்.

No comments:

Post a Comment