உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் அழையா விருந்தாளியாக சிறுத்தை வந்ததால் மாப்பிள்ளை பயத்தில் அலறியடித்து ஓடியுள்ளார்.
உத்திரபிரதேசம் மொரதாபாத்தில் திருமணத்தில் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, திடீரென உள்ளே நுழைந்த சிறுத்தையை பார்த்து அனைவரும் அச்சத்தில் ஓடியுள்ளனர்.
மந்திரம் சொல்வதில் மும்முரமாக இருந்த மாப்பிள்ளை அப்போதுதான் சிறுத்தையைப் பார்த்துள்ளார்.
பார்த்த வேகத்தில் அலறியடித்து பயந்து ஓடியுள்ளார், இதனைத் தொடர்ந்து சிறுத்தையை விரட்டி விட்டு, மாப்பிள்ளையை பிடித்து மணவறையில் உட்கார வைத்த பின்னர், ஐயர் மந்திரம் ஓத திருமணம் நடைபெற்றது. 

 
No comments:
Post a Comment