Sunday, December 28, 2014

சங்கக்காராவை பின்னுக்கு தள்ளி டோனி உலக சாதனை

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் 134 ஸ்டம்பிங்குகள் செய்த டோனி உலக சாதனை புரிந்துள்ளார்.

மிட்செல் ஜான்சனை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றியதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அஸ்வின் வீசிய பந்தை நன்றாக மேலேறி வந்து ஆட முயன்று மிட்செல் ஜான்சன் பந்தைக் கோட்டைவிட டோனி சுலபமாக ஸ்டம்ப்டு செய்தார். இது இவரது 134வது சாதனை ஸ்டம்பிங்காக அமைந்தது.

டெஸ்ட் போட்டிகளில் 38, ஒருநாள் கிரிக்கெட்டில் 85, டி20 கிரிக்கெட்டில் 11 ஸ்டம்பிங்குகள் செய்து மொத்தம் 134 ஸ்டம்பிங்குகளுடன் இலங்கையின் குமார் சங்கக்காரா சாதனையை முறியடித்துள்ளார் டோனி.

சங்கக்காரா 133 ஸ்டம்பிங்குகளை மொத்தம் 485 இன்னிங்ஸ்களில் நிகழ்த்த, டோனியோ 460 இன்னிங்ஸ்களில் அந்த சாதனையைக் கடந்தார்.

No comments:

Post a Comment