குஷ்பூ, ஆர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உட்பட பலரும் கலந்துகொண்ட இவ்விழா கலகலப்பாகவே நடைபெற்றது. லேட்டாக வந்தாலும் கலகலப்பாக பேசத்துவங்கிய ஆர்யா ‘ஆம்பள’ என்ற டைட்டிலை ‘அம்பாள’ என்று படித்ததெல்லாம் சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அதன்பிறகு விஷாலின் டைட்டிலுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம் என்பதை விளக்கும்போது ஆர்யா “படம் பொங்கல் ரிலீஸ்னு கேள்விபட்டதும் ‘என்ன மச்சான் பொங்கலுக்கு நிறைய படம் ரிலீஸாகுது. நீயும் ரிலீஸ் பன்ற பாத்துக்கடா’ அப்படினு சொன்னபோது எவனா இருந்தாலும் வெட்டுவேன்” என்று விஷால் சொல்லியதை போட்டு உடைத்தார்.
ஆம்பள படத்தின் இசையைப் பற்றி பேச மைக்கை பிடித்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக ‘விஷால் தான் உண்மையான ஆம்பள’ என்று அவர் திருட்டு டிவிடி விற்பவர்களை பிடித்துக் கொடுத்ததைக் குறிப்பிட்டு பேசினர்.
வழக்கம்போலவே விஷாலின் ரசிகர் மன்றத்தின் சார்பாக ஆளுயர மாலை ஒன்று விஷாலுக்கு ரசிகர்கள் மூலமாக அவருக்கு அணிவிக்கப்பட்டது. இந்தமுறை அந்த மாலை விஷாலின் காரிலேயே வந்து சேர்ந்தது சிறப்பு.


 
No comments:
Post a Comment