லதா ரஜினிகாந்த்துக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை மும்பையை சேர்ந்த தனியார் வங்கி ஒன்று கைப்பற்றி உள்ளது. 
லதா ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தைத் தயாரிப்பதற்காக லதா ரஜினிகாந்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை அடகு வைத்து வங்கியில் பணம் பெற்றதாகத் தெரிய வருகிறது. இதையடுத்து சவுந்தர்யாவுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனம் கடனை செலுத்தாமல் விட்டதால், நிலத்தை பறிமுதல் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்ட மும்பையை சேர்ந்த தனியார் வங்கி, லதாவின் 2 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு சொந்தமான நிறுவனம் ஆரம்பித்த புதிதில் பல்வேறு படக் கம்பெனிகளிடம் அனிமேஷன் வேலையை ஆர்டர் எடுத்து அவர்களை திண்டாட விட்டதாகவும் பல தகவல்கள் இப்போது கசிய ஆரம்பித்துள்ளன. 

 
No comments:
Post a Comment