Friday, December 26, 2014

ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தில் 259/5

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியுள்ளது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட் இழப்புக்கு 259 ஓட்டங்களை எடுத்திருந்தது.

ரோஜர்ஸ் 57 ஓட்டங்களையும், ஷேர்ன் வட்சன் 52 ஓட்டங்களையும் எடுத்தனர். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களை எடுத்திருந்தார். அவருடன் களத்தின் விக்கெட் கீப்பர் ஹாடின் துடுப்பெடுத்தாடி வருகிறார்.

பந்துவீச்சில் யாதவ், சாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

No comments:

Post a Comment