இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தொடங்கியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 429 ஓட்டங்களை எடுத்தது.
பிராண்டன் மெக்குலம் அதிவேகமாக 134 பந்துகளில் 195 ஓட்டங்களை குவித்தார். இதில் 18 பவுன்றிகள், 11 சிக்ஸர்கள் அடங்கும். 200 ஓட்டங்களை கடந்திருந்தால், டெஸ்ட் போட்டிகளில் அதிவேக இரட்டைச் சதம் அடித்த வீரர் எனும் பெருமையை பெற்றிருப்பார். இந்த வருடம் மெக்குலத்திற்கு ராசியான வருடம். இதோடு மூன்று முறை இரட்டைச் சதத்தை கடந்துவிட்டார். நாளை இரண்டாம் நாள் ஆட்டமாகும்.

 
No comments:
Post a Comment