இந்திய துணை அணித்தலைவர் கோஹ்லியும், அவரது காதலி அனுஷ்கா சர்மாவும் நள்ளிரவில் மெல்போர்ன் நகரில் சுற்றித்திரிந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன், மனைவிகளை தங்க அனுமதி அளித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், காதலியை அழைத்து செல்ல தடை தொடரும் என்று அறிவித்துள்ளது.
இதனால் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லியின் காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா கோஹ்லியுடன் இணைந்து இருக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் ஜோடியாக பல இடங்களில் சுற்றி திரிந்தார். இதனால் அவரது ஆட்டம் பாதிக்கப்பட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அனுஷ்கா சர்மா தனது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ளார்.
காதலனை பார்ப்பதற்காகவே அவர் மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ளதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று முதல் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் விராட் கோஹ்லி மெர்ல்போர்னில் அனுஷ்கா ஷர்மா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றதாகவும், இரவு முழுவதும் இருவரும் மெல்போர்ன் சாலையை சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த புகைபடங்கள் இணையதளத்தில் பதிவாகி உள்ளது. மேலும் இவர்களை மெல்போர்ன் சாலையில் பார்த்த இந்தியர் ஒருவர் அவர்களை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் காதலர்கள் இருவரும் இநத புத்தாண்டில் தங்களது திருமணம் குறித்த அதிகாரபூர்வ தகவலை வெளியிடுவார்கள் என்று இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலிய போட்டியில் விளையாடி வரும் நிலையில் இரவு முழுவதும் நடிகையுடன் ஊர்சுற்றிய விராட் கோஹ்லி மீது கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.

 
No comments:
Post a Comment