மேல்மருவத்தூரில் நண்பனுடன் சேர்ந்து சகோதரனே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேல்மருவத்தூர் அடுத்த சின்ன கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி. கணவனை இழந்த இவர், தனது மகள் பிரியாவுடன் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல் அச்சிறுபாக்கத்தில் தான் பணியாற்றும் நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த பிரியாவை அப்பகுதியை சேர்ந்த ஜெகன் மற்றும் முருகன் ஆசைவார்த்தை கூறி, வயல்வெளிக்கு அழைத்து போய் இருவரும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது.
நடந்த சம்பவத்தை பிரியா தனது அம்மாவிடம் கூறியதையடுத்து கஸ்தூரி மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இன்று புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெகன் மற்றும் முருகன் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெகன் பிரியாவின் சித்தப்பா மகன் என விசாரணையில் தெரியவந்துள்ளது, இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
No comments:
Post a Comment