பெஷாவர் தாக்குதலின் முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள ராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 6 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 132 குழந்தைகள் உட்பட 145 பேர் பலியாகி உள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.
தலிபான் அமைப்பைச் சேர்ந்த 11 தீவிரவாதிகள் இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் 7 பேர் மட்டுமே பள்ளிக்குள் சென்றுள்ளனர். மற்ற 4 பேரும், பள்ளிக்கு வெளியே இருந்து அவர்களுக்கு உதவி செய்துள்ளனர்.
உள்ளே சென்ற 7 பேரில், தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் சென்று பள்ளியை ரத்தக் காடாக்கியுள்ளான்.
மற்ற 6 பேரும், தங்களது கைகளில் இருந்த இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இவர்களுக்கு வெளியே இருந்த 4 தீவிரவாதிகளும் அன்றைய தினம் முழுவதும் அப்பகுதியிலேயே இருந்து கொண்டு நடக்கும் தாக்குதலையும், ராணுவ நடமாட்டம் முழுவதையும் கண்காணித்து தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால் உள்ளே இருந்த தலிபான்கள் 7 பேரும் ராணுவத்தினரால் கொல்லப்பட்டதை அறிந்த வெளியிருந்த தீவிரவாதிகள் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
No comments:
Post a Comment