Friday, December 26, 2014

டோனிக்கு வார்த்தைகளில் கவனம் தேவை: சொல்கிறார் கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் ஓய்வு அறையில் ஒருவகை அமைதியின்மை நிலவியதாக அணித்தலைவர் டோனி கூறியது தவறு என்று முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின்போது ஷிகர் தவன் காயம் அடைந்ததை அடுத்து, யார் களமிறங்குவது என்ற விடயத்தில், ஓய்வு அறையில் ஒரு வித அமைதியின்மை நிலவியதாக டோனி தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறியதாவது, டோனி தவறான வார்த்தையைப் பிரயோகித்து விட்டார் என்று நினைக்கிறேன். அமைதியின்மை என்பதற்குப் பதிலாக நிச்சயமற்ற நிலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

கோஹ்லி களமிறங்குவாரா, அல்லது தவன் களமிறங்குவரா என்ற நிச்சயமற்ற நிலையே அங்கு நிலவி இருக்க வேண்டும். எனவே, நிச்சயமற்ற நிலை என்பதே சரியான வார்த்தை.

நேரடி ஒளிபரப்புக்கு பேட்டி கொடுக்கும்போது கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்.

தற்போது, கோஹ்லிக்கும், தவனுக்கும் இடையே பிளவு இல்லை என்பதை டோனி தெளிவுபடுத்தி விட்டார். எனவே, அணித்தலைவர் வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment