Sunday, December 28, 2014

சதம் விளாசிய கருணாரத்னே: இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது இலங்கை

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே 2வது இன்னிங்ஸில் சதம் விளாசினார்.

இலங்கை–நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 441 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 138 ஓட்டங்களில் சுருண்டு ‘பாலோ ஆன்’ ஆனது.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை நேற்றைய 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 84 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. இலங்கை தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே அபாரமாக விளையாடி தனது முதல் சத்தை அடித்தார். அவர் 152 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

3வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 293 ஓட்டங்கள் குவித்தது. இதன் மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது.

No comments:

Post a Comment