ISIS பயங்கரவாதிகள் சமீபத்தில் இணையத்தில் வெளியிட்ட படத்தால் பெரும் சர்சையை தோன்றியுள்ளது. வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த முஸ்லீம் இளைஞர்கள் இந்தப் பயங்கரவாதிகளோடு இணைகிறார்கள் என்று பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் கவலை வெளியிட்டு வரும் நிலையில், பிரித்தானியாவைச் சேர்ந்த ஆங்கிலேய இளைஞர் ஒருவரும் ISIS இயக்கத்தில் இணைந்துள்ளது போன்ற படம் ஒன்று வெளியாகியுள்ளது. இவை இணையத்தில் உலாவருவதால், மேலும் பல இளைஞர்களுக்கு இந்த இயக்கத்தில்சேர ஆர்வம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
புகைப்படத்தில் உள்ள இளைஞர் யார் என்று தெரியவில்லை என்றும். அவர் பிரித்தானியாவை சேந்தவராக இருக்கலாம் என்றும் பொலிசார் கூறியுள்ளார்கள். இதேவேளை இப்புகைப்படம் உண்மையில்லை என்றும், போட்டோ ஷாப் மூலம் செய்யப்பட்ட புகைப்படமாகக் கூட இருக்கலாம் என்றும் பிரித்தானிய ஸ்காட்லான் யாட் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் குறித்த இளைஞர் தொடர்பாக, பாரிய விசாரணைகளை அரசாங்கம் முடிக்கிவிட்டுள்ளது. இதுவே பிற்காலத்தில் பெரும் தலையிடியாக மாறலாம்.
மேற்கு உலகில் வாழும் இளைஞர்கள் பலர் தம்து X பாக்ஸ் மற்றும் WI போன்ற விளையாட்டு உபகரணங்களில் சண்டையிடும் கேம்ஸையே அதிகம் பாவிப்பது வழக்கம். இவர்களுக்கு நேரடியாகச் சென்று சண்டையிட வாய்ப்பு கிடைத்தால் சும்மாவா இருப்பார்கள். அதனால் பல இளைஞர்கள், இவ்வாறு தீவிரவாத இயக்கங்களோடு இணைகிறார்கள். மேலும் சிலர் ஒரு திரில்லிங்(திரில்) இருக்க வேண்டும் என்று நினைத்து இணைகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

 
No comments:
Post a Comment