Friday, December 26, 2014

குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்துவிட்டு காதலனோடு ஓட்டம்பிடித்த காதலி: காதல் ருசிகரம்

லக்னோவில் இளம் பெண் ஒருவர், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினருக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு காதலனோடு ஓட்டம் பிடித்துள்ளார்.

லக்னோவின் ஆரியூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி பகுதியில் வசித்து வரும் சுப்ரியாம் என்ற பெண் அதே பகுதியில் வசித்து வரும் சைலேந்தர் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதலுக்கு, சுப்ரியாமின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இவர் தனது காதலை பற்றி எடுத்துக்கூறியும் வீட்டில் சம்மதிக்க மறுத்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து சுப்ரியாம், தனது காதலனோடு சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.

அந்த திட்டத்தின்படி, விஷத்தை காபியில் கலந்து கொடுத்து தனது அப்பா மற்றும் தாத்தா பாட்டியினருக்கு கொடுத்துவிட்டு, தனது காதலனோடு ஓட்டம் பிடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுயநினைவற்று கிடந்த, இவர்களை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், மேலும் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment