Thursday, December 25, 2014

400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்: சாமியார் மீது பாயும் சீடன்

அரியானா மாநிலத்தில் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்த சாமியார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சீடர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சாச்சா ஸவ்தா என்ற ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர் குர்மீத் ராம் ரஹீம்.

இவர் மீது இவருடைய முன்னாள் சீடர் ஹன்ஸ் ராஜ் சவுகான் சார்பில் அவரது வழக்கறிஞர் நவ்கிரண் சிங் பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார்.

அதில், குர்மீத் தன்னுடைய 400 சீடர்களூக்கு ஆண்மை நீக்கம் செய்து உள்ளார். இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளே நடைபெற்று உள்ளது.

ஆண்மை நீக்கம் செய்தால் தான் கடவுளை சந்திக்கமுடியும் என உறுதி அளித்து இந்த காரியத்தை செய்து உள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி உள்ளார்.

மனுதாரரான் ஹன்ஸ்ராஜ் சவ்கான் தேரா சாச்சா ஸவ்தா அமைப்பில் தனது 16 வயதில் சேர்ந்துள்ளார்.

தற்போது அவருக்கு 31 வயது ஆகிறது. கடந்த 15 வருடங்களாக அந்த அமைப்பில் இருந்து உள்ளார். சவ்கானை இந்த அமைப்பின் தலைவர் குர்மீத்திடம் அவரது பெற்றோர்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

இது மிகவும் முக்கியமான ஆப்ரேஷன், இது மிகவும் வலி மிகுந்தது. இந்த ஆப்ரேஷன் முடிந்தவுடன் 30 முதல் 35 நாட்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும்.

இந்த ஆப்ரேஷன் ஒவ்வொரு மாதமும் தேரா சாச்சா ஸவ்தா கட்டிடத்தில் நடைபெறும் என குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment