பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் விளம்பரம் ஒன்றில் நடித்த 5 வீரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் அப்ரிடி, முகமது இர்பான், வகாப் ரியாஸ், அன்வர் அலி, பஹத் ஆலம் ஆகியோருக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதற்காக ஐந்து வீரர்களிடமும் விளக்கம் கோரி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒரு வாரத்துக்குள் அவர்கள் விளக்கம் அளிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளக்கம் அளிக்காவிட்டால் 5 வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அப்ரிடி பாகிஸ்தான் அணியின் டி20 போட்டியின் அணித்தலைவராக உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ணத்தோடு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment