புதுயுகம் தொலைக்காட்சியில் ஸ்டார் ஐங்ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் வனிதா மோகன். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தாலும் அடிப்படையில் அவர் ஒரு டான்சர். பல மேடைகளில் ஆடியிருக்கிறார். கடந்த 5 வருடங்களாக பல சேனல்களில் இசை, நடனம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
வனிதா தற்போதும் தனது வீட்டில் 15 சிறுவர் சிறுமிகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்து வருகிறார். அதனை விரிவுபடுத்தி விரைவில் ஒரு நடனப்பள்ளி அமைக்க திட்டமிட்டுள்ளார். "நடனமும், இசையும்தான் என் உயிர்மூச்சு. தொகுப்பாளினியாக இருப்பது வித்தியாசமான அனுபவத்திற்காகத்தான். ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியில் பல நட்சத்திரங்களை சந்திக்கும் வாய்ப்பும், அவர்களது உண்மையான குணத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. நடன பள்ளி உருவாக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. அதற்கான நேரம் இப்போது கனிந்து வந்திருக்கிறது" என்கிறார் வனிதா மோகன்.

No comments:
Post a Comment