மும்பை எரவாடா சிறையிலிருந்து இரண்டுவார பரோலில் இன்று வெளிவந்துள்ளார் நடிகர் சஞ்சய் தத்.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது தடை செய்யப்பட்ட ஆயுதங்களான துப்பாக்கி ரகங்களை காரில் வைத்திருந்த குற்றச்சாட்டில், குற்றம் உறுதி செய்யப்பட்டு, சிறைத் தண்டனை பெற்றார் நடிகர் சஞ்சய் தத். அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று உறுதியானது. வழக்கு நடைப்பெற்றபோதே ஒன்றரை வருடங்கள் சஞ்சய் தத் சிறைத் தண்டனை அனுபவித்து வந்ததால் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறையில் இவருக்கு தனி வேலையும் ஒதுக்கித் தரப்பட்டு, அவர் சிறையில் நல்ல ஒழுங்கு நிலைக் கைதியாக இருந்து வரும் நிலையில் இந்த வருடத்தில் மட்டும் இத்துடன் மூன்றாவது முறையாக பரோலில் வெளிவந்துள்ளார். இவருக்கு மட்டும் ஏன் அடிக்கடி பரோல் என்று சர்ச்சை கிளம்பிய நிலையில் இந்த மூன்றாவது பரோலுக்கு மட்டும் 6 மாத கால அவகாசம் அவர் எடுத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
No comments:
Post a Comment