Tuesday, December 23, 2014

கே.பாலச்சந்தர் மறைவு - விஜயகாந்த் இரங்கல்

இயக்குநர் கே.பாலச்சந்தர் மறைவையொட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்றும், அவர் கலையுலகிற்கு உணர்வோடு ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூறத் தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலையுலகத்தினற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment