Wednesday, December 24, 2014

அப்பிள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை

இதுவரை காலமும் அப்பிள் நிறுவனம் Mac இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளுக்கு அப்டேட்களை பயனர்களின் ஒப்புதலின் பின்னரே நிறுவக்கூடிய வசதியினை வழங்கி வந்தது.

ஆனால் முதன் முறையாக கணனியின் பாதுகாப்புடன் தொடர்புடைய அப்டேட்களை தானியங்கி முறையில் நிறுவக்கூடிய வசதியினை உலகெங்கிலும் உள்ள அப்பிள் கணனி பாவனையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

இதேவேளை கணனி இயங்குதளத்தில் காணப்படும் தவறுகள் நீக்கி பதிப்புக்களையும் இவ்வாறு தானியங்கி முறையில் நிறுவக்கூடிய வசதியினை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

எவ்வித குறைபாடுகளையும் கொண்டிராத இப்புதிய அப்டேட்களை நிறுவும்போது கணனியை மீண்டும் இயக்க வேண்டி (Restart) அவசியமும் இருக்காது என அப்பிள் நிறுவனத்தின் பேச்சாளர் Bill Evans ரொய்ட்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment