Thursday, December 25, 2014

திருடப்பட்ட விலையுயர்ந்த புறா: கண்டுபிடிப்பவர்களுக்கு 10,000 யூரோ சன்மானம்

ஜேர்மனியில் உள்ள ஒரு பறவை வளர்ப்பவர் ஒருவரிடம் இருந்து சுமார் 150,000 யூரோ மதிப்புள்ள ஹோமிங் வகை புறாவை திருடர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர்.

ஜேர்மனியின் Düsseldorf பகுதியில் உள்ள அந்த நபரிடம் இருக்கும் நூற்றுக்கணக்கான புறாக்களில், திருடர்கள் விலை மதிக்கத்தக்க இந்த புறாவினை சரியாக தெரிவு செய்து கடத்தியுள்ளனர்.

பறவை வளர்ப்பாளர், அந்த குறிப்பிட்ட புறாவிற்கு AS 969 என்ற பெயரினை வைத்து குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அந்த பறவையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு சுமார் 10000 யூரோக்கள் சன்மானமாக வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், அந்த சாம்பல் நிற புறாவிற்கு 6 வயதாகிறது என்றும், ஞாயிறன்று காலை 6 மணியளவில் அந்த புறா காணாமல் போனதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், இந்த பறவை பல இடங்களில் நடந்த பந்தய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பல பரிசுகளை வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment