Thursday, December 25, 2014

பின்லேடன் விவரத்தை அம்பலப்படுத்தியது ஏன்? வீரரை வெளுத்து வாங்கும் அதிகாரிகள்

ஒசாமா பின்லேடன் படுகொலையை அம்பலப்படுத்திய காரணம் குறித்து முன்னாள் சிறப்பு அதிரடிப் படை வீரரிடம், அமெரிக்க தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

பாகிஸ்தானின் அபோதாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன், கடந்த, 2011ம் ஆண்டு மே 2ம் திகதி அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் பின்லேடனை நெற்றிப் பொட்டில் சுட்டது நான்தான் என முன்னாள் சிறப்பு அதிரடிப் படை வீரர் ராபர்ட் ஓ நீல்(Robert O Neil), கடந்த மாதம் தெரிவித்து உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் இத்தகவலை அம்பலப்படுத்தியது ஏன்? என அவரிடம் தற்போது அமெரிக்க தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே சிறப்பு அதிரடிப் படையில் சேரும் போது, வேலையின் தன்மை குறித்து யாரிடமும் தெரிவிக்க மாட்டேன் என அளித்த உறுதிமொழியை, ராப் ஓ நீல் மீறிவிட்டார் என அதிரடிப் படை தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment