Wednesday, December 24, 2014

முகநூல் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது!

இணையதளம் மூலம் facebook எனப்படும் முகநூலை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கருத்துக்கணிப்புக்கள் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் தனியார் கருத்துக் கணிப்பு நிறுவனம் ஒன்று உலக அளவில் முகநூல் பயன்படுத்துபவர்கள் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் முகநூல் எனப்படும் facebook தளத்தை அறிமுகப்படுத்திய பின்னர் 2012ம் ஆண்டில் 13 முதல் 17 வயது வரையிலானவர்களில் 95 சதவிகிதம் பேர் முகநூலை பயன்படுத்தினர் என்றும், இந்த வருட கணக்குப்படி பார்க்கும்போது அது 88 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகில் பொதுவாக அனைத்து வயதினரும் என்று முகநூலைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையைப் பார்க்கும்போது 2012ம் ஆண்டு இருந்த சதவிகிதம் 93லிருந்து இப்போது 90 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்றும் அந்த கருத்துக் கணிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment