Thursday, December 25, 2014

எனக்கு ஷாரூக்கான் தான் வேணும்: சாய்னா நெஹ்வால்

தனது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் தயாரிக்கப்பட்டால் அதில் தீபிகா படுகோன், ஷாரூக்கான் நடிக்க வேண்டும் என்று சாய்னா நெஹ்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையாக உள்ள சாய்னா நெஹ்வால் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுர் சிட்டியில் தனது முதலாவது பேட்மிண்டன் அகாடமியை தொடங்கியுள்ளார்.

இந்த ஆண்டில் இந்திய ஓபன், அவுஸ்திரேலிய ஓபன், சீன ஓபன் ஆகிய பட்டங்களை வென்றதுடன், ஆசிய விளையாட்டிலும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

தான் ஆரம்பித்த அகாடமியின் மூலம் தரமான வீரர்களை உருவாக்க விரும்புவதாக தெரிவித்த சாய்னா, தன் வாழ்க்கை வரலாற்றை பற்றி திரைப்படம் அல்லது ஆவணப்படம் எடுக்கப்பட்டால் அதில் தீபிகா படுகோன், ஷாரூக்கான் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஷாரூக்கான் எனக்கு பிடித்த நடிகர். அவர் எனது வாழ்க்கை வரலாறு படத்தில் பயிற்சியாளராக நடிக்க வேண்டும்.

அதே போல் என்னுடைய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அவருக்கு எப்படி பேட்மின்டன் விளையாட வேண்டும் என்பது தெரியும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment