Wednesday, December 24, 2014

ஆடைமாற்றும் அறையில் வைத்து வெளுத்து வாங்கிய யூசுப் பதான்

இந்திய அணியின் சகலதுறை வீரரான யூசுப் பதான், தகாத வார்த்தையால் சீண்டிய ரசிகர் ஒருவரை தாக்கியுள்ளார்.

இந்தியாவின் உள்ளூர் போட்டியான ரஞ்சி டிராபியில் ஜம்மு-காஷ்மீர், பரோடா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் யூசுப் பதான் துடுப்பெடுத்தாடிய போது அங்கு அமர்ந்திருந்த இளம் ரசிகர் ஒருவர் சில தவறான வார்த்தைகளால் கிண்டல் செய்துள்ளார்.

யூசுப் பதானை மட்டுமல்லாது பல வீரர்களை தொடர்ச்சியாக வார்த்தைகளால் தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த யூசுப், அவரை ஆடைமாற்றும் அறைக்கு அழைத்துச் சென்று கன்னத்தில் சரிமாரியாக அறைந்துள்ளார்.

பின்னர் நிலைமை தெரிந்து உள்ளே வந்த அணியின் சக வீரர் மற்றும் சகோதரரான இர்பான் பதான், அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த இளம் ரசிகரின் பெற்றோர்கள் அங்கு வந்து மன்னிப்புக் கேட்டதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதனை பரோடா கிரிக்கெட் சங்கம் (BCA), செயலாளர் ஸ்னேஹல் பாரிக் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தவறு வரும் காலத்தில் நடக்காமல் இருக்க நடுவர் மூலம் பி.சி.சி.ஐக்கு இந்த விடயம் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment