இந்திய வீரர்கள் தங்கள் காதலிகளுடன் தங்கிக் கொள்வதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, இந்திய வீரர்களின் மனைவிகள் மட்டுமே உடன் இருக்க முடியும், காதலிகளுக்கு அனுமதியில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
அவுஸ்திரேலியாவில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் காலத்தில் தான் புத்தாண்டும் பிறக்க உள்ளது. புத்தாண்டின் போது மனதுக்கு பிடித்தவர்களுடன் இருக்க வீரர்கள் விரும்புகின்றனர். இது கிரிக்கெட் வாரியத்தின் காதுகளுக்கும் எட்டியுள்ளது.
வீரர்களின் மனக்குறையை போக்க, மனைவிகள் மட்டுமின்றி காதலிகளும் வீரர்களுடன் நேரத்தை செலவிடலாம் என்று கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பாட்டீல் கூறுகையில், இது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விடயம். மனைவிகள் மட்டுமே கணவனுடன் இருக்கலாம், காதலிகள் இருக்க கூடாது என்று கடுமையான சட்டத்தை போட முடியாது. எனவே தான் விதிமுறையை தளர்த்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்களை சந்திக்க காதலிகள் அனுமதிக்கப்பட்டாலும், ஹொட்டலில் ஒரே அறையில் தங்க அனுமதி கிடையாது.
ஹொட்டலில் சாப்பிடலாம், வேறு அறையில் தங்கிக்கொள்ளலாம் என்பது விதிமுறை. மனைவியை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்ற ஐந்து வீரர்களுக்கு மட்டுமே ஹொட்டலில் ஒன்றாக தங்க அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment