வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கிருந்தபடி தேர்தல்களில் வாக்களிக்க வாய்ப்புக்களை ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதுக்குறித்துக் கூறுகையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கிருந்தபடி நேரடியாகத் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் 3 வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறியுள்ளார். மிக விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையமே வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கு வசிக்கும் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வைக்கப்படும் வாக்குப் பதிவு எந்திரங்களின் மூலம் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு தங்களது வாக்குகளைப் பதிவு செய்யும் ஒரு முறையும். அங்குள்ளவர்கள் இந்திகிருக்கும் தங்களது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் வாக்களிக்கும் உரிமையை எழுத்துப் பூர்வமாக அறிவித்து, பின்னர் இங்குள்ளவர்கள் அங்குள்ளவர்களின் சார்பாக வாக்களிப்பதும் என்று ஒரு முறையும் என மூன்று வழி முறைகளை இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment