Wednesday, December 24, 2014

நயன்தாராவை கிண்டல் செய்த பிரேம்ஜி!

சரத்குமார் நடித்த ஐயா படத்தில் நடித்தபோதே கிட்டத்தட்ட ஆன்ட்டி போன்ற உடல்கட்டுடன்தான் இருந்தார் நயன்தாரா. அதன்பிறகுதான், தனது எடையை குறைத்து ஸ்லிம்மாக மாற்றிக்கொண்டவர், பில்லா படத்துக்குப்பிறகு இன்னும் பாடி லாங்குவேஜை மாற்றி சினிமாவில் அழுத்தமாக கால் பதித்தார்.

இப்போது நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டபோதும், அந்த உடல்கட்டை அப்படியே பராமரித்து வரும் நயன்தாரா, இப்போது தமிழில் மட்டும், மாஸ், நண்பேன்டா, இது நம்ம ஆளு, தனி ஒருவன், நைட் ஷோ, நானும் ரெளடிதான் என அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதில் சூர்யாவுடன் நடிக்கும் மாஸ் படத்திற்காக தனது உடல் எடையை சற்று அதிகப்படுத்தியிருக்கும் நயன்தாராவுக்கு, புடவை கெட்டப்பிலும் காட்சிகள் உள்ளதாம். அவருடன் அர்ஜூனின் ஜெய்ஹிந்த்-2 படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவீனாவும் ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம். அதனால் காட்சிகளில் நடித்து முடித்ததும், பெரும்பாலும் 4 வயது யுவீனாவுடன்தான் விளையாடுவாராம் நயன்தாரா.

அப்போதெல்லாம், அவர் நயன்தாராவைப்பார்த்து ஆன்ட்டி ஆன்ட்டி என்றுதான் அழைப்பாராம். அதையடுத்து, யூனிட் இருந்த பிரேம்ஜி உள்ளிட்ட சிலரும் நயன்தாராவை ஆன்ட்டி என்றே கிண்டல் செய்யத் தொடங்கி விட்டார்களாம். அதைக்கேட்டு டென்சன் ஆன நயன்தாரா, இனிமேல் என்னை ஆன்ட்டி என்று சொல்லக்கூடாது. அக்கா என்றுதான் சொல்ல வேண்டும் என்று கண்டிசனாக கூறி விட்டாராம்.

No comments:

Post a Comment