கே.பாலச்சந்தரின் அறிமுகங்கள் எல்லோருமே உயர்ந்த இடத்துக்கு வந்து விடுவார்கள். அபூர்வமாக ஒரு சிலர் அப்படி வர முடியாமல் போய்விடுகிறார்கள். அவர்களில் ஒருவர் விமலா ராமன். ஆஸ்திரிலேயாவில் பிறந்து வளர்ந்த விமலா முறைப்படி நடனம் கற்றவர் 2006ம் ஆண்டு பாலச்சந்தரால் பொய் படத்தில் அறிமுகமானார். முதல் படத்தின் தோல்வி விமலாவுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. அதன் பிறகு மலையாளப் படங்களில் மளமளவென நடிக்க ஆதரம்பித்தார். அங்கும் வாய்ப்புகள் குறையவே தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்தார். இடையில் ராமன் தேடிய சீதை என்ற படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். அதன்பிறகும் ஆறேழு வருடங்களாக தமிழ் சினிமா பக்கம் காணோம். இடையில் சில இந்திப் படங்களிலும் நடித்தார். பிறகு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகிவிட்டதாக சொன்னார்கள்.
தற்போது தலா ஒரு இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்த கிங்பிஷர் பேஷன் ஷோவில் கலந்து கொண்டு கேட் வாக் போட்டார். யார் இந்த பொண்ணு என்று கேட்கிற அளவிற்கு ஆளே மாறிப்போய் இருந்தார். உடல் எடைகுறைத்து முன்பை விட அழகாக காட்சி அளித்தார் (அருகில் உள்ள படம்). சரியான வழிகாட்டிகள், மானேஜர்கள் இருந்தால் அழகும், திறமையும் மிக்க விமலா ராமன் தமிழ் சினிமாவில் மீண்டும் வலம்வர வாய்ப்பிருக்கிறது.

No comments:
Post a Comment