Thursday, December 25, 2014

பயத்தை வெளிக்காட்டிய தவான்: சொல்கிறார் மேத்யூ ஹைடன்

இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு மண்ணில் வெற்றி நம்பிக்கை இல்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

இந்திய அணி அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் அளித்த ஒரு பேட்டியில், தற்போதைய தொடரில் தோல்விக்கு காரணம் தேடுவது போலவே இந்திய அணி வீரர்களின் பேச்சு இருக்கிறது.

அவர்களிடம் வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இல்லை. இது மிகப்பெரிய பலவீனமாகும். முக்கியமான தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்திய அணி செய்வதில்லை.

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் 4ம் காலையில் ஷிகர் தவான் களமிறங்க மறுத்தது அவரது மன பயத்தை காட்டுகிறது. ஷிகர் தவானின் முடிவு இந்திய அணியில் குழப்பம் உள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.

ஆக்ரோஷமாக செயல்படுவது என்பதை இந்திய அணியினர் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment